மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .
Nagenthiram Karunanithy

திருமந்திரம் - பாகம் 01 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

20/8/2017

0 Comments

 
Picture
திருமந்திரம் (பாகம் 1 )
நாகேந்திரம் கருணாநிதி
திருமந்திரத்திற்கு ஒரு மந்திரம் இல்லை என்பது முன்னோர் வாக்கு. திருமந்திரம் அன்பே சிவம் என்னும் தத்துவத்தின் மூலம் எமது அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளை மிகவும் சிறப்பாக விளக்குகிறது.  உலகில் உள்ள சகல உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தக் கற்றுத் தருகிறது. ஆன்மீக வாழ்க்கைக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம் மூலம் இறைவனைச் சேர வழி காட்டுகிறது. .  சைவம், தமிழ் ஆகிய இரு பெரும் துறைகளில் தலைசிறந்த மும்மணிகள் எனக் கூறப்படும் நூல்களுள் திருக்குறள், திருவாசகம் ஆகியவற்றுடன் திருமந்திரமும் ஒன்றாகும். சைவசமய நூல்களில் மந்திரம் எனக் கூறப்படும் ஒரே நூல் திருமந்திரமாகும். இந்நூல் சைவசித்தாந்த சாத்திரமாகவும், இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திரமாகவும் போற்றப்படுகின்றது. இந்நூல் தமிழ் மூவாயிரம் எனவும், திருமந்திர மாலை எனவும் அழைக்கப்படுகிறது. இந்நூல் பத்தாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளது. ​

Picture
ஔவையார்

“தேவர் குறளும் திருநாள் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்.”

இதன் பொருள்   திருக்குறள், நான்கு வேதங்கள், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் படைப்புக்கள், அகத்தியரின் நூல், திருஞானக்கோவை, திருவாசகம் ஆகிய அனைத்துமே திருமூலர் கூறும் ஒரு வாசகத்திற்கு இணை என்பதாகும். இக்கூற்றிற்கு மேலாகத் திருமந்திரத்தைப் பற்றிக் கூறவேண்டிய அவசியமில்லை.

திருமந்திரத்தை அருளிய திருமூல நாயனார் அட்டமா சித்திகள் பெற்ற தவயோகி எனவும், அவர் திருக்கயிலாய மலையிலிருந்து தென் நாட்டிற்கு வந்தவர் எனவும், கூறப்படுகின்றது. அவர் கி.பி. 4 ஆம் ,5 ஆம் நூற்றாண்டில் மூவாயிரம் வருடங்களாக யோக நிலையிலிருந்து ஆண்டுக்கொருமுறை விழித்து ஒவ்வொரு பாட்டாகத் தமிழில் திருமந்திரத்தைப் பாடியதாக வரலாறு கூறுகின்றது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான இவரைச் சுந்தரமூர்த்தி நாயனார் “நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்“ எனத் திருத்தொண்டர் தொகையிலும், சேக்கிழார் பெருமானான் திருத்தொண்டர் புராணத்தில் “கயிலாயத்து ஒரு சித்தர் பொதியில் சேர்வார் காவிரி சூழ் சாத்தனூர் கருதும் மூலன்” எனவும் போற்றியுள்ளார்கள்.     

 திருமந்திரம்   ஒன்பது தந்திரங்களைக் கொண்டுள்ளது.        
முதற் தந்திரம் முப்பொருள் உண்மையை அதாவது பதி, பசு, பாசம் ஆகிய மூன்றும் என்றும்  உள்ளவை எனும் சைவசித்தாந்தக் கருத்தை  விளக்கி, அவற்றின் இயல்புகளை விளக்குகிறது. அத்துடன் யாக்கை, செல்வம், இளமை, உயிர் ஆகியவை நிலையற்றவை என  விளக்குகிறது.  மேலும் ஒழுக்கம் அதாவது கொல்லாமை, புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை, பிறர் மனைவியை நாடாமை, அறம், அன்பு, கல்வி போன்ற பொதுவான அறங்களை வலியுறுத்துகிறது.

இரண்டாம் தந்திரம் புராணக்கதைகள் மூலம் நல்லொழுக்கம், உண்மைப்பொருள் விளக்கம், ஐந்தொழில்களின் செயற்பாடுக்கேற்ப உயிர்களின் செயற்பாடுகள் பற்றி  விளக்குகிறது. அகத்தியம், அட்டவீரட்டம் (1.அந்தகாசுரனை அழித்த தலம் 2.தக்கன் தலை எடுத்த தலம், 3.பிரமன் அகந்தை அழிந்த தலம், 4.சலந்திராசுரனை அழித்த , தலம், 5.திரிபுரம் எரித்த தலம், 6.யானைத் தோல் போர்த்த தலம், 7.காலனை உதைத்த தலம், 8.மன்மதனைக் கொன்ற தலம்),  இலிங்கபுராணம், தக்கன்வேள்வி, பிரளயம், சக்கராயுதம், எலும்பும் கபாலமும், அடிமுடி தேடல் என்பனவும் இதில் அடங்குகின்றது.

மூன்றாம் தந்திரம்  அட்டாங்க யோகம் [இயமம் (முதற் தந்திரத்தில் கூறிய ஒழுக்கம்), நியமம் (தவம், செபம், ஆத்திகம், மனநிறைவு, தானம், விரதம், ஞானநூற் கேள்வி, சிவ வேள்வி, சிவபூசை, நற்பண்பு முதலியனவற்றை நியமமாகச் செய்தல்.) மூலம் பலப்படுத்திய உள்ளத்தையும், உடலையும் ஒருமுகப்படுத்தி மேலும் பலப்படுத்தச் செய்யும் ஆசனம்] அட்டமாசித்தி, சோதிடம்,  மற்றும் பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) போன்ற விடையங்களுடன் ஆறு ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை) பற்றியும் விளக்குகிறது.

நான்காம் தந்திரம் மந்திரங்கள் மூலம் ஞானத்தை அடையும் வழி, அசபா மந்திரம் (உச்சரிக்கப்படாத மந்திரம்), சக்கரங்கள், நடனசபை (சிற்றம்பலம், பொன்னம்பலம், வெள்ளியம்பலம், தாமிரசபை, சித்திரசபை), திருநடனம் (அற்புதத் தாண்டவம்,   ஆனந்தத் தாண்டவம், அனவரதத் தாண்டவம், பிரளயத் தாண்டவம், சங்காரத்   தாண்டவம்), ஐந்தெழுத்து, எல்லாம் சிவமே எனும் தத்துவம், சிவசக்தி வழிபாடு என்பன பற்றியும் விளக்குகிறது.

ஐந்தாம் தந்திரம் அன்பாலும், அருளாலும் சிவப்பரம்பொருளை அடைய முயலும் வழிபாட்டு முறையான சைவம் (சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடும் சுத்த சைவம்) பற்றியும், இறைவனை அடையும் வழிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றியும், அவற்றால் கிடைக்கும் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் பற்றியும், சத்திநிபாதம் பற்றியும் விளக்குகிறது.

ஆறாம் தந்திரம் இறைவனே மானுடச் சட்டை தாங்கிக் குருவடிவாக வருவதனையும், ஞானம் பெறும் மார்க்கங்களையும், துறவு, தவம், வேடம், திருநீற்றின் மகிமை பற்றியும் விளக்குகிறது.

ஏழாம் தந்திரம் இறைவன் திருவடிகளைக் காணும் வழிகளான ஆறு ஆதாரங்கள் பற்றியும், இறைவனின் அடையாளமான சிவலிங்கங்கள் (அண்டலிங்கம், பிண்டலிங்கம், சதாசிவலிங்கம், ஆத்மலிங்கம், ஞானலிங்கம், சிவலிங்கம்) பற்றியும், சிவபூசை, சிவதீட்சை, குருபூசை, மகேஸ்வரபூசை, அடியார் பெருமை, போசனவிதி, சற்குரு, சமாதி பற்றியும், ஐம்புலன்களை அடக்கும் முறை பற்றியும் விளக்குகிறது.

எட்டாம் தந்திரம்  பதி, பசு, பாசம் பற்றியும், பாசம் அகலப் பசு பதியை அடைவது பற்றியும், சிவன் கோயில் அமைப்பு பதி, பசு, பாசம் (சிவலிங்கம், நந்தி, பலிபீடம்) பற்றியும், மூவகை ஆன்மாக்கள் (விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர்) பற்றியும், ஐந்தொழில் ஆற்றும் ஈசான மூர்த்தி பற்றியும், முக்குற்றம் (காமம், வெகுளி, மயக்கம்), முப்பதம் (தத்பதம், தொம்பதம், அசிபதம்), பற்றியும், அசிபதநிலை (தத்துவமசி) அது நீயாய் இருக்கிறாய் என்ற விளக்கம் பற்றியும் விளக்குகிறது.

ஒன்பதாம் தந்திரம் பஞ்சாக்கரம் (தூல பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம், அதிசூக்கும பஞ்சாக்கரம்), திருக்கூத்து, முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மாவுக்குள் அடங்கிய பின் சிவப்பரம்பொருள் ஆன்மாவைத் தன்வசப்படுத்தும் முறை, ஒளி வடிவில் இறைவனைக் காணல், ஊழ் வினை, சிவதரிசனம், சித்தி மார்க்கம், முத்தி மார்க்கம், சிவபதி சேரும் வழி போன்ற பல விடையங்கள் விளக்கப்பட்டுள்ளன.
​
திருமந்திரத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் மிகவும் சிறப்பாகக் காணப்பட்டாலும் இவற்றை விரிவாகப் பார்க்கு முன் நாங்கள் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய சில பாடல்களைச் சுருக்கமாக முதலில் பார்ப்போம்.
0 Comments



Leave a Reply.

    Photo

    என்னைப்பற்றி

    நாகேந்திரம் கருணாநிதி
    மயிலிட்டி

    பதிவுகள்

    August 2017
    July 2017
    May 2017
    April 2017
    March 2017
    January 2017
    December 2016
    November 2016
    October 2016
    September 2016
    August 2016
    July 2016
    June 2016
    May 2016
    April 2016
    February 2016
    January 2016
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    May 2015
    April 2015
    March 2015
    February 2015
    January 2015

    முழுப்பதிவுகள்

    All

      தொடர்புகளுக்கு:

    Submit
நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!
Hit Counter by Digits
© 2011-22 myliddy.fr