காலப்பெருவெளியில் உனைக் கைநழுவ விட்டு 22 வருடங்கள்.15 யூன் 1990 வெள்ளிக்கிழமை மாலை 3மணி,
எங்கள் பொன் விளைந்த பூமியில் மண் விழுந்த நாள். எப்படி மறப்பது அந்நாளை? மயிலிட்டி மண்ணே! இரும்புக்கூண்டில் இருந்த இராஜபறவை நீ! எவனும் வாலாட்ட முடியாத வல்லரசு. அதனால் தான் பக்கத்து தெருவில் பெருத்த காவல், கடல்வழி பார்க்க காங்கேசன் துறைமுகமும், வான்வழி பார்க்க பலாலி விமானநிலையமும், தரைவழி பார்க்க சீமெந்து சாலையும் நிமிர்ந்து நின்றது. கட்டுமரமேறி ஒருவனும். கலைத்தாய் மடியில் இன்னொருவனும், கற்பகதருவின் உச்சியிலே மற்றவனும், கலப்பை முனையிலே மற்றொருவனும், சிந்திய வியர்வையில் பொங்கிய பெருவெள்ளம் நீ. காட்டாற்று வெள்ளமே கண்பட்டு போனதோ? உனை இழந்தோம், உறவிழந்தோம், சொத்திழந்தோம்,சுகமிழந்தோம், ஏதிலிகளானோம்,திசைமாறிப்போனோம், அகதியென பெயரெடுத்து உலகெங்கும் அலைகின்றோம். இன்று கனடாவில் வாழும் உன்னவர்கள் ஒன்று கூடுகிறார்கள், அடுத்த கூடலாவது உன்னடியில் ஆகட்டும். நன்றி.... நமது உறவு சண் கஜா (மயிலைக் கவி) பதிவு 30/06/2012 |
கருத்துக்கள்:அன்ரன் ஞானப்பிரகாசம்You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம்.
Submitted Information:பெயர்: Anton Gnanapragasam மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: சிற்ப்பகலைஞர் செல்லப்பா (பிள்ளையார்)சண்முகநாதன் மகன் கஐன் (மயிலை கவி) மயிலை மண் வீழ்ந்து 22 ம் அகவைக்கு அழகாக கவி படைத்ததிற்கு என் வாழ்த்துகள். இவரின் தந்தை ஓர் சிற்பாசாரி மட்டுமன்றி ஓர் கவிஞரும் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன். |