"ஆசை"
என் காதலியே....
பௌர்ணமி நிலவுபோல் மலர்ந்திட்ட உன் முகத்தினை ஒவ்வொரு நொடியும் பார்த்திட ஆசை! மாதுளம்பழ முத்துக்கள் போல் உள்ள உன் பல்வரிசை சிரிப்பினை பார்த்திட ஆசை! உன் மீன் விழிகளால் கண்ணோரம் என்னைப்பார்ப்பதை பார்த்திட ஆசை! பிறைபோல் உள்ள உன் நெற்றியில் விழுந்திருக்கும் தலை முடியினை மருதாணி வைத்த அழகிய நீண்ட விரல்களால் கோதிவிடுவதைப் பார்த்திட ஆசை! கொவ்வைப்பழம் போல் உள்ள உன் செவ் உதடுகளை உரசிவிட ஆசை! சங்குக் கழுத்து போல் உள்ள உன் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டுவிட ஆசை! மெது மெதுவென உள்ள உன் பட்டுக் கன்னங்களை என்கைகளால் தடவிவிட ஆசை! மல்லிகை மொட்டுச் சரத்தினை உன் அழகிய நீண்டகூந்தலில் சூடுவதை பார்த்திட ஆசை! வாழைத் தண்டுபோல் நேர்த்தியான மெதுமெதுவான உன் கால்களில் சலங்கையினை அணிந்து நடந்து வருவதை பார்த்திட ஆசை! நீ அணிந்திருக்கும் சேலைபோல் நானும் உன்னுடன் சேர்ந்து வாழ்ந்திட ஆசை! மாலைப் பொழுதினில் கையோடுகை சேர்த்து காதல் வார்த்தை பேசி உலாவர ஆசை! என் அழகிய தேவதையே உன்னப் படைத்த பிரம்மனுக்கு நன்றி சொல்லிவிட ஆசை....ஆசை.....! ச. சாந்தன்
|