"அழகிய நாட்கள்"
பாசத் தோட்டத்தில் வளர்ந்த பயிர்கள்
அழகிய தாயும் தாய் மண்ணும் அன்றைய நிஜங்கள் இன்றைய வருடங்கள் அம்மா அம்மா என்று மூச்சுக்கு முன்னூறு தடவைகள் கூப்பிட்ட படியே வீட்டு முற்றத்தின் மணலில் உருண்டு பிரண்ட சந்தோசமான ஆழம் நிறைந்த அந்த அழகிய நாட்கள் எம் வாழ்வில் இனி வருமா? தோழிகளுடன் மாதாகோவில் கிணற்றில் தண்ணீர்க் குடத்தை நிறைத்து இடையினில் வைத்து ஒருகை அதை அணைக்க மறுகைவீசி புதினங்கள் பலபேசியபடி நடை அணிந்த அந்தநாட்கள், எங்கு திரும்பினாலும் பாசக்கயிற்றினால் பின்னிப்பிணைந்து வாழ்ந்த நினைவுகள் நெஞ்சத்தை உரசும் அந்த அழகியநாட்களை விரையும் வினாடிகளில்,நடக்கும் நிமிடங்களில், நகரும் நாட்களில் நாம் தேடிக்கொண்டிருப்பதாய் நினைத்துத் தொலைத்ததுதான் அதிகம். நினைவிலும் கற்பனையிலும் காலங்கள்தான் கடந்து செல்கின்றது. கற்பனையில் வாழும் நாம் நிஜத்தில் எப்போது அந்த அழகிய நாட்களுக்குள் கால் பதிப்போம்! ஜீவா உதயம் |