பிரமனின் படைப்பில் என்ன விசித்திரம் அழகை உலகிற்கு அறிமுகப்படுத்தியவன் அதற்குரியவளாக பெண்ணையே படைத்தான் அழகின் மொத்த உருவமும் பெண் பொறுமையின் சிகரமும் பெண் பொறாமைக்குரியவளும் பெண் வலிமையைத் தந்திடுபவளும் பெண் வலியைத் தந்திடுபவளும் பெண் அன்பின் ஊற்றிடமும் பெண் அறிவை தந்திடுபவளும் பெண் அழிவைத் தந்திடுபவளும் பெண் பாசத்திற்குரியவளும் பெண் பாசாங்கு செய்பவளும் பெண் அகிலம் போற்ற வாழ்ந்திட அறிவுரை கூறுபவளும் பெண் உலகின் மொத்த அழகையும் தன்னகத்தே கொண்டவளும் பெண்!
மயிலை ச. சாந்தன் பதிவு: 09/03/2013
"பெண்" ஆக்கத்திற்குரிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்!