"இறைவனின் சாபம்!"
கருமேகம் விலகிட கிழக்குத் திசையில்
சூரிய உதயம் உலக அழகிபோல் உலாவர குயில் கூட்டங்கள் இசையினை மீட்ட யாவரும் செங்கம்பளத்துடன் காலைப் பொழுதை வரவேற்க ஏனோ... எனக்கு இன்னும் காலைப் பொழுது கசப்பே! ஏன் தெரியுமா உனக்கு எனக்கோ இரண்டு அன்னையர்கள் ஒன்று என்னைக் கருவில் சுமந்த தாய்! மற்றையவள் என்னைத் தன்மடியில் தாலாட்டி வளர்த்த மயிலைமண்! அவர்களை முத்தமிட நான் அருகில் இல்லை என்னை அரவணைக்க அவர்களும் அருகில் இல்லை நானோ பல்லாயிரம் மைல் தொலைவில் அகதியாகினேன். காதுகளில் கேட்கிறது அன்னையர்களின் அழுகுரல் என் விழிகளில் கண்ணீர்த் துளிகள் மௌனமாக இதுதான் இறைவனின் சாபமா........? ச. சாந்தன்
|
|