சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!
கருவறையில் மலர்களை மலர்விக்கின்றவளே
வாடா மலராக மலருவது எப்போது? பூஜையறையில் பூஜிக்கவேண்டிய நீ பூஜைக்கே ஏற்காத எருக்கலம்பூவாக இருப்பது ஏன்? புள்ளிமான் போல் துள்ளித்திரிந்த நீ புலிக்கூண்டில் அடைபட்ட மானாக இருப்பது ஏன்? தோகைமயில்போல் ஆடித்திரிந்த நீ சிறகொடிந்த பறவைபோல் இருப்பது ஏன்? சுட்டெரிக்கும் சூரியன்போல் பார்வையுடையவளே ஒளியிழந்த விம்பம்போல் நீ இருப்பது ஏன்? மனம்போல சிந்தனை செய்பவளே மணவாழ்க்கைக்கு அவசரப் படுத்தப்படுவது ஏன்? அழகுக்கே அழகு சேர்ப்பவளே உன்னைப் போதைப் பொருளாகப் பார்க்கப்படுவது ஏன்? ஒரு கணம் பெண்ணே.... சிந்தனைக்கு சில வரிகள் உனக்கு....... கண்ணீர் என்னும் உன் அணுஆயுதத்தைக் கரைத்துவிடு! பொறாமை என்னும் உன் பொக்கிஷத்தைப் புதைத்துவிடு! காமவெறியர்களின் ஆசைவார்த்தைகளுக்கு பலியாகிவிடாதே! மணவாளனின் மனம் கோணாமல் நடந்துவிடு! புகுந்தவீட்டில் எல்லோரையும் புரிந்து நடந்துகொள்! மனம் போன போக்கில் முடிவெடுத்துவிடாதே! சொல்வார் புத்திகேட்டு நடந்துவிடாதே! சமையல் என்னும் புகைமூட்டத்தில் உன்னைக் கருக்கிவிடாதே! கண்டதற்கும் ஆசைப்படுவதை அளவோடு நிறுத்திக்கொள்! அறிவாற்றல் இல்லாதவள் போல் தலையாட்டுவதை நிறுத்திக்கொள்! புறம் பேசுவதை நிறுத்தப் பழகிக்கொள்! அன்போடு எல்லோரையும் அரவணைக்கக் கற்றுக்கொள்!.......... ச.சாந்தன்
|
|