"மயிலையின் பெருமை"
மயிலிறகை இரசித்த நான் மயிலை ஊரில் பிறந்தேன்! மண்ணை நேசிக்கும் நான் மகுடம் சூட்டிய ஊரில் பிறந்தேன்! வீரர்கள் வரலாற்றை நேசிக்கும் நான் வீரம் சிம்மாசனமிட்ட ஊரில் பிறந்தேன்! வீராப்புப் பேசும் நான் விருந்தோம்பும் ஊரில் பிறந்தேன்! புனிதம்தனை விரும்பும் நான் புனித ஊரில் பிறந்தேன்! புகழின் உச்சியினைத் தேடும் நான் புவியினை நேசிக்கும் ஊரில் பிறந்தேன்! சந்தண வாசனையை விரும்பும் நான் சதியினை வெல்லும் ஊரில் பிறந்தேன்! சங்கீதத்தை இரசிக்கும் நான் சாதியினை ஒழிக்கும் ஊரில் பிறந்தேன்! இல்லறத்தை நேசிக்கும் நான் இறைவன் குடியிருந்த ஊரில் பிறந்தேன்! இரங்கலை விரும்பும் நான் இரத்தலில் கொடிகட்டிய ஊரில் பிறந்தேன்! அன்பை விரும்பும் நான் அறம் செய்யும் ஊரில் பிறந்தேன்! அழகை நேசிக்கும் நான் அகம்பாவத்தினை ஒழிக்கும் ஊரில் பிறந்தேன்! பாசம்தனை பகிர்ந்துகொள்ளும் நான் பண்பான மண்ணில் பிறந்தேன்! பாவைகளை நேசிக்கும் நான் பாவிகள் இல்லா ஊரில் பிறந்தேன்! கவிதைகளை விரும்பும் நான் காவியமான ஊரில் பிறந்தேன்! கருமைகளை விரும்பும் நான் கருணை நிறைந்த ஊரில் பிறந்தேன்! தாய்மையினை நேசிக்கும் நான் தர்மத்தினை வெல்லும் ஊரில் பிறந்தேன்! தனிமையினை விரும்பும் நான் தரணியெங்கும் புகழ்பாடும் ஊரில் பிறந்தேன்! ச. சாந்தன் பதிவு: 22/09/2012
|
|