மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .

மயிலை மண்ணில் எனது ஒருநாள் பொழுது

பகுதி 1

சிட்டுக் குருவிகளின் சத்தம் எனை மெல்லத் துயிலெழுப்பும், அதற்கு மேலும் நித்திரைகொண்டால் காகங்களின் கரைதல் என்னைக் கண் விழிக்கச் செய்யும். விருப்பமின்றி போர்வையை விட்டு விடுதலையாகி வீட்டுக்குள் பாயினில் இருந்தபடியே முற்றத்தில் உள்ள மல்லிகைப் பந்தலின் மேல் அணில்கள் துள்ளித் திரிவதை இரசித்தபடியே யன்னலின் ஓரம் வருவேன். சுற்றுமதிலில் பூனை பாசத்துடன் என்னைப் பார்த்துச் செல்லும். குசினியில் தொங்கிய கட்டாக் கருவாட்டின் ஒரு பகுதியைக் காணவில்லை என எனது அம்மா போடும் சத்தத்தில்.... பூனையின் பாசப் பார்வையின் அர்த்தம் புரியும்.

வீட்டுக்குள் சுவர் மணிக்கூட்டுக்கும் யானைச் சிலைக்கும் இடையில் கட்டிய சிட்டுக்குருவியின் வீட்டிலிருந்து அதன் குஞ்சுகளின் சிணுங்கல் மெல்ல கேட்கும்.... தாய் தந்தைப் பறவைகள் நான் வீட்டுக்கதவைத் திறந்தவுடன் இரை தேட வெளியேறிச் செல்லும்.

கோடிப் பக்கம் ஒண்டுக்குச் செல்லும்போது பின்பக்கத்து முருங்கை மரத்திலிருந்த கிளிகளும் பறவைகளும் சிதறிப் பறக்கும். சிறிய மரமாக இருந்தாலும் பூத்துக்குலுங்கி, காய்த்து கொத்தும் குலையுமாக எழிலுடன் நிமிர்ந்து நிற்கும் முருங்கை மரத்தை ஒரு கணம் எனை மறந்து இரசிப்பேன். அதன்மேல் ஓடித்திரியும் அணில்களின் சேட்டைகள் தனி அழகே. பக்கத்து வீட்டுக்குள் நிறையக் காய்த்து சரிந்து விழுந்தாலும் எமது அனுமதியின்றி ஒரு காயும் புடுங்காத, கௌரவ தன்மானத் தமிழர்களான அயலவர்களுடன் ஒரு காலத்தில் வாழ்ந்ததையும், இப்போது வெளிநாடுதனில் நாம் காசு கொடுத்து வாங்கிய தொலைபேசியை பொது இடத்தில் வெளியில் எடுப்பதற்கே பயப்படும் வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைக்க எமது மண்ணையும்  மக்களையும் நினைக்க கண்கள் கலங்குகின்றது.

அதன் பக்கவாடில் தானாகவே தோன்றி தானாகவே வளர்ந்த உயர்ந்த பப்பாசி மரத்து உச்சத்தின்மேல் எனது பார்வை உயரும். முருங்கைமரத்தால் ஏறி வீட்டின்மேல் மெல்ல நடந்து சென்று இன்னும் பழுக்கவில்லையா? என்று நான் பலமுறை அழுத்திப் பார்த்ததில் பப்பாசிப்பழம் கண்டிவிடும்.வீட்டின்மேல் நின்று பார்த்தால் கடலினில் கரை திரும்பும் படகுகளின் வருகை தெரியும். 


கீழிறங்கி கிணற்றடிப் பக்கம் செல்வேன் பக்கத்து வீட்டுத் தென்னமரத்து ஓலைகளுக்கு இடையே சூரியனின் மஞ்சள் ஒளி மெல்லத் தெரியும். இடது பக்கத்து வீட்டில் உள்ள வேப்பமரத்தில் இருந்து நல்ல மூலிகைக் காற்று எமது வீட்டுக்குள் வீசும். அரை வாளித் தண்ணியை அள்ளி அரையும் குறையுமாக முகத்தைக் கழுவிவிட்டுத் தேநீர்க் குவளையுடன் முன்பக்கத்து முற்றத்திற்கு வருவேன். அங்கு முதல் நாள் நட்ட தக்காளிமரம் காய்த்துவிட்டதா, பழுத்துவிட்டதா என்றெல்லாம் ஆவலோடு எட்டிப்பார்க்கும் அறியாப் பருவம். 4 மணிப்பூ இன்னும் என் பூக்கவில்லை என்றும் பார்த்துவிட்டு செவ்விளநீர் மரத்தின்மேலே ஏறி முற்றாத குரும்பையைப் பிடுங்கி வெறும் இளநீரைப் பருகிவிட்டு வழுக்கலை வழித்துச் சாப்பிடுவேன். 

பின்னர் துறைமுகத்தை நோக்கி (ஹார்பர்) மெல்ல நடப்பேன். கடல் மிக மிக அமைதியாய் இருக்கும். வீட்டு வாசலில் வந்தததும் முன் வீட்டாரின் வேலியில் உள்ள வாதநாராணி மரங்கள் எழில் தரும், அதன் பக்கத்து வீட்டில் சண்டி மரம் நெடிதாகத் தெரியும். இடையிடையே பூவரச மரங்களும் காட்சி தரும். துறைமுகத்தின் வலது பக்கத்தில் நடந்து செல்வேன். அமைதியானகாலைப் பொழுதினில் அமைதியாய் இருக்கும் காலையினில் பாறைகள் பாசிகள் சிறு மீன் இடை இடை ஓடித் திரிவது தெளிவாவத் தெரியும்.துறைமுகத்தின் முடிவிற்குச் சென்று வரும்போது மறுபக்கத்தால் திரும்பி வருவேன்.இடையில் இரு துறைமுகங்களிற்கும் இடையே எனக்குத்தெரிந்தவர்கள் மீன்பிடியை முடித்துக் கொண்டு படகினில், கட்டுமரத்தினில் உள் நுழைந்துகொண்டிருப்பார்கள்.

பகுதி 2
சூரியன் எனது வெறும் உடலில் மெல்லிய சூடேற்றி பள்ளிக்கூடத்திற்கு நேரமாகின்றது என நினைவுபடுத்துவான். எனது கால்கள் வீட்டை நோக்கி விரைவாக நடக்கும். பக்கவாட்டாக தொழிலுக்குச் செல்லாத படகுகளையும் வள்ளங்களையும் கணக்கிட்டவாறு விரைவாக நடப்பேன். கரையினில் படகுகளும் கட்டுமரங்களும் கரைதட்டி மீன் தெரித்துக் கொண்டிருப்பார்கள். வானில் காகங்களும் பிராந்துகளும் இலவச இரைக்காக சுற்றித் திரியும்.

வீட்டுக்குள் நான் நுழைய குரக்கன் மாப் புட்டு அவியும் வாசம் படலை வரை பரவி எனது பசியைக் கிளப்பிவிடும்.  கிணற்றடி தவணை முறையில் பயன்படுத்தப்பட்டு எனது முறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். எனது தாயார் இரவு உடைக்குமேல் சேலையைச் சுற்றிக் கொண்டு அவசரமாய் பலாப்பழம் வாங்க சந்தைக்குச் செல்வார்.

நானோ குரக்கன் புட்டும் பலாப்பழமும் சாப்பிடுவதற்காகவே விரைவாகக் குளித்துவிட்டுத் தயாராவேன். பின்னர் குசினிக்கு உனது கோப்பை எனது கோப்பை, உனது பலகைக்குத்தி எனது பலகைக்குத்தி, இது நான் வழமையாக சாப்பிடுற இடம், இது என்ர இடம் இது உன்ர இடம் என்று பத்து நிமிட சண்டைகளுக்குப் பின்னர் காலை உணவு முடியும்.

பின்னர் என்ர அழிறப்பர், பென்சில், பேனை, கலர்ப் பென்சில்.... சண்டைகளும் ஒருவழிக்கு வந்து பள்ளிக்கூடம் செல்லப் புறப்படுவோம். நாவலடி ஒழுங்கையில் நடந்து செல்லும்போது வைரவர், வீரபத்திரர் கோவிலடியில் ராட்சத அரசமரத்தைப் பார்த்து வியந்துகொண்டு பக்கத்தே ஆலமரத்தின் பச்சைப் பசேல் என்ற இலை தழைகளிடையே அதன் சிகப்பு நிறப் பழத்தின் அழகை இரசித்தது இன்னும் கண்களில் குளிர்மையாகவே இருக்கின்றது.

சோமர் அண்ணையின் கடையில் ஐந்து சதத்திற்கு மூன்று இனிப்பு வாங்கிக்கொண்டு வலது பக்கமாக மயிலிட்டிச் சந்தியை அடைந்து, இடது பக்கமாக கட்டுவன் வீதியில் நடந்து செல்வோம்.அதற்குள் எனது நண்பர்களும் இணைந்துகொண்டு மயிலிட்டிச் சந்தியில் அக்கம் பக்கமாக உள்ள புளியமரத்தின் கீழ் சென்று சுண்டங்காய்களை கல்லெறிந்து விழுத்திப் பொறுக்கிக்கொண்டு பக்கத்தில் உள்ள விளாத்தி மரத்தின் கீழ் விழுந்து கிடக்கும் விளாம்பழங்களையும் பொறுக்கிக் கொண்டு நடந்து செல்வோம்.

அக்கம் பக்கமாக பள்ளங்களும் பாம்புகள் உள்ள காடுகள் இருந்தும், யாருமற்ற நடைபாதைகள் இருந்தும் பெரியவர்கள் தொட்டு சிறுவர்கள் வரை தனியே பாடசாலை சென்று திரும்பி வந்தோம். இன்று அதிநவீன நகரத்தில் வாழ்ந்துகொண்டு தனியே பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பமுடியாமல் இருக்கும் இயந்திரத்தனமான வாழ்க்கையை எண்ணிப் பார்க்கையில் மயிலிட்டி என்ற எமது கிராமம் சொர்க்க பூமியாக காலம் கடந்து எமது கண்களுக்கு இப்போதுதான் தெரிகின்றது.

பாடசாலை செல்லும் வழியில் திரும்பி வரும்போது வேட்டையாடுவதற்காக, பழங்கள் உள்ள அன்னமின்னா மரங்களையும், அணிஞ்சில் பழ மரங்களையும், நாகதாளிப்பழம், இலந்தைப்பழம், நொங்கு விழுந்திருக்கும் இடம் என அனைத்து இடங்களையும் வேவு பார்த்துக் கொண்டே பாடசாலை செல்வோம்.

போகும் வழியில் ஐஸ் மில்லைக் கடந்தவுடன் வலது பக்கமாக அமைதியாகக் காட்சிதரும் குளத்தடியையும் அதன் பின்பக்கமாக உள்ள கோவிலையும் காலையில் பார்த்து இரசிப்பது தனி சுகமானதே! குளத்தடிக்கு முன் ஒழுங்கையில் இறங்கி நடந்து செல்கையில் எமது பள்ளிக்கூடத்தின் பாலர் வகுப்புக் கட்டிடம் கம்பீரமாகத் தெரியும். வலது பக்கமாகத் திரும்பி சிறிது தூரம் நடக்க "மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம்" எனும் வரவேற்புப் பலகை கம்பீரமாக மயிலை மண்ணின் செல்வங்களை அன்புடன் வரவேற்கும்! 

பகுதி 3

பாடசாலைக்குள் நுழைய மூன்று பாதைகள் உண்டு. பாலர் வகுப்பின் முன்பக்கத்தில்  உள்ள பாதை, அதிபர் அவர்களின் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள பிரதான பாதை மற்றையது விளையாட்டு மைதானத்தின் பின் பகுதியால் வந்து நுழையும் பாதை. அனைத்து மாணவர்களும் தங்கள் வசதிக்கேற்ப உள் நுழைவார்கள். 

எனது பாலர் வகுப்பின் ஆசிரியராக மதிப்பிற்குரிய திருவாளர் இராசரத்தினம் அவர்கள் இருந்தார்கள். மாணவர்களுடன் அன்பாகப் பழகக்கூடியவர். தடியினைக் கையில் வைத்திருப்பாரே தவிர எம்மைத் தண்டிக்கமாட்டார். 

எமது பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் இருவர் தேவாரம் பாட நாம் அனைவரும் எழும்பி நின்று கைகூப்பித் தேவாரம் பாடி "அரஹர மகாதேவா" சொல்லி அமருவோம்.

காலை தேநீர் இடைவேளையின்போது மைதானத்துக்குச் சென்று பெரிய மாணவர்கள் விளையாடுவார்கள். நாம் எமது வகுப்பறையின் முன்பாக இருந்த "மலை வேம்பு" மரத்தடியில் சென்று விளையாடுவோம். பட்டம் கட்டி விளையாடுவதற்கு மலைவேம்பில் வடிந்திருக்கும் இயற்கையான பிசினை சிறு போத்தலில் பல மாணவர்களும் எடுத்துச் செல்வார்கள்.

பின்னர் தாகம் தீர்ப்பதற்கு மைதானத்திற்குப் பக்கத்தில் உள்ள வீட்டிற்க்குச் செல்வோம். அவர்களின் காணி மிகப்பெரியது. அவர்களால் செதுக்கிய கோவில் வாகனங்கள் அங்கும் இங்குமாக இருக்கும். பட்டறையில் பெரிய மரத்தினை இருவர் மட்டும் பெரிய வாள்கொண்டு அறுத்துக்கொண்டிருப்பார்கள். இப்போது நினைத்தாலும் மரமறுத்தபோது வந்த மரத் தூள் வாசனை மூக்கின்முன் வந்து நிற்கின்றது. அவர்களால் செய்யப்பட்ட கலை வண்ணமயமான கோவில் வாகனங்களைப் பார்த்து பிரமித்ததும் இப்போதும் அவ்வப்போது கண் முன்னே வந்து வந்து செல்கின்றது.

அவர்களது கிணற்றடியில் பெரியமாணவர் ஒருவர் துலாமூலம் தண்ணீரை அள்ளி வாளியினைச் சரித்து ஊற்ற நாமனைவரும் முண்டியடித்துக்கொண்டு இரு கைகளையும் வாளியின் பக்கத்தில் ஏந்தியவாறு எமது தாகத்தினைத் தீர்த்துக்கொள்வோம்.

வரும்போது பெரியமாணவர்கள் அவர்களது காணியில் உள்ள மாமரங்களில் ஏறி மாங்காய்களைப் பிடுங்கிக்கொண்டு வருவார்கள். பெண்கள் நெல்லிமரம் உள்ள வீட்டுக்குச் சென்று கிணற்றுத் தண்ணீரை ஓசியில் குடித்துவிட்டு அங்குள்ள நெல்லிக்காய்களையும் மாங்காய்களையும் லாவகமாக அடித்துக்கொண்டு வருவார்கள். 

மைதானத்துக்குப் பக்கத்தில் அமைந்திருந்த மலைக்குப் பக்கத்தில் (பழைய கட்டிடம்) பன்னீர்ச் செடிகளும், பூநாறி மரங்களும், இடையிடையே காஞ்சோண்டி மரங்களும் செறிந்து காணப்படும். சிறுவர்கள் பன்னீர்ப் பழங்களையும் பூனாறிப் பழங்களையும் பறித்து உண்பார்கள்.

மணியடிக்கும் சத்தம் பலமாகக் கேட்கும். அனைத்து மாணவர்களும் வகுப்பறைக்குள் சென்று அமர மீண்டும் வகுப்புக்கள் ஆரம்பமாகும். சிறிதுநேரம் செல்ல அனைத்து மாணவர்களும் ஒரு விடயத்திற்க்காகக் காத்திருப்பார்கள். சிலர் வாசல் வழியினையும் அடிக்கடி எட்டிப் பார்ப்பார்கள். வேறொன்றுமில்லை பாடசாலை பிஸ்கற்றுக்காகத்தான் அனைவரது காத்திருப்பும்.

பெரிய மண்ணிற சீமெந்துப் பைபோன்ற பையில் நிறைந்திருக்கும் பிஸ்கற்றுப்  பை வகுப்பறைக்குள் நுழைந்ததும் அனைவரது வாய்களிலும் தேனூறும். இன்றும் அந்த பள்ளிக்கூடத்து பிஸ்கற்று வாசம் எனது மூக்கைவிட்டுப் போகவில்லை. நாம் அனைவரும் புத்தகத்தை விரித்துநீட்ட பெரிய மாணவர்கள் ஒரு குவளை நிறைந்த பிஸ்கற்றை எமக்குப் பரிமாறுவார்கள்.


பகுதி 4

நாம் அனைவரும் அவரவர் குடும்பத்தினில் எவ்வளவு சுவையான உணவுகளை உண்டு மகிழ்ந்தாலும், பள்ளிக்கூடத்தில் எமக்குப் பரிமாறப்பட்ட பிஸ்கற்றினை தேனமுதமாகவே நினைத்து மனமகிழ்ந்து உண்போம்.


மீண்டும் சிறிது நேரப் படிப்பின்பின்னர் பாடசாலை முடிவடையும் முன்னர் வழமைபோல பெரியவர்கள் இருவர் தேவாரம் பாட நாம் அனைவரும் நிறைவில் "அரஹரமகா தேவா" இறுதியாகக் கூறும்போதே மறுகையில் புத்தகப்பையினை எடுத்துக்கொண்டு, நீண்டகாலம் சிறைப்பட்டு இருந்தவர்கள் விடுதலை ஆகியது போன்று அனைவரும் துள்ளிக்குதித்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்புவோம்.

கிராமக்கோடு, பிள்ளையார் கோவிலடி, முலவைப் பகுதியைச் சேர்ந்த எனது சகமாணவ நண்பர்கள் அதிபரின் அலுவலகத்திற்கு முன்பு உள்ள பாதையால் வீடு திரும்புவார்கள். 

கொத்தாவத்தை, அம்பத்தை, வேல்வீதியைச் சேர்ந்த எனது சகமாணவ நண்பர்கள் குளத்தடியின் பின்பக்கத்து வழியாக நடக்கத் தொடங்குவோம். நடந்து செல்கையில் இடையில் பனை மரங்களும், ஈச்சமரங்களும் உள்ள இடங்களைத் தாண்டிச் செல்கையில், (மழைக் காலத்தின் தண்ணீர் மயிலிட்டி மதவடியைச் சென்றடையும்) பெரிய வாய்க்காலைத் தாண்டிச் சென்று அடர்ந்த பனைவெளிக்கு முன்பாக காட்டுக் கொய்யாமரங்கள் உள்ள பகுதிக்கு முன்பாக சிறு விளையாட்டு மைதானம் போன்று உள்ள இடத்தைத் தாண்டி, தூள் மில்லுக்குப் பின்பக்கமாகச் சென்று பிரதான வீதியை அடைவோம். 

வேல்வீதிக்குச் செல்பவர்கள் வீதியைக் கடந்து உள்ளே செல்வார்கள். பிரதான வீதியின் இடது பக்கமாக அம்பத்தை, கொத்தாவத்தையைச் சேர்ந்தமாணவர்கள் நடந்து செல்வார்கள். 

மயிலிட்டி மதவடி, துறைமுகம், மயிலிட்டிச் சந்தியைச் சேர்ந்த எனது சகமாணவ நண்பர்கள் எமது பாலர் வகுப்புக்கும் மலைவேம்புக்கும் இடையில் உள்ள துணைப் பாதை ஊடாக நேரே குளத்தடிப் பக்கம் நடந்து சென்று வலது பக்கமாக நடப்பார்கள். குளத்தடியில் உள்ள தவறணையில் சிலர் மூக்குமுட்ட ஏற்றிக்கொண்டு தள்ளாடிச் சென்றுகொண்டிருப்பதைப் பார்த்து எமது மாணவர்கள் நையாண்டி நக்கலடித்துக்கொண்டு நேரே நடப்பார்கள்.

தொடர்ந்து நடக்கையில் பெரியமாணவர்கள் சிலர் "ஐஸ் மில்" பெரிய காணிக்குள் புகுந்து தேடுவாரற்றுக் கிடக்கும் தென்னைமரங்களில் ஏறிக் "கள்ள இளநீர்" வேட்டையாடுவார்கள். மற்றைய மாணவர்கள் சிலர் அதன் வலது பக்கமாக சிறுவெளிக்கு முன்பாகக் காட்சிதரும் விளாத்திமரத்தினில் ஏறி விளாங்காய்களை பிடுங்கி உண்டு மகிழ்வார்கள். 

வீதியின் இடப் பக்கத்தில் அடர்த்தியாகக் காணப்படும் பனை மரங்களின் கீழ் விழுந்திருக்கும் அணில்கள் கொந்திய நொங்கினைக்கண்டு பல மாணவர்களும் முண்டியடித்துக்கொண்டு ஓடுவார்கள். சிலர் அங்கே காணப்படும் நாகதாழிப் பழங்களையும் ஒருகை பார்ப்பார்கள்.

தொடர்ந்து நடந்து வரும்போது மதவுக்குப் பக்கத்தில் உள்ள பெரிய அணிஞ்சில் பழ மரத்திலே பாடசாலையின் கால்ப் பங்கு மாணவர்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறி சிகப்பு இளம்சிகப்பு நிறமான அமுதம் தரும் அணிஞ்சில் பழங்களைப் பறித்து உண்டு மகிழ்வார்கள்.  


பகுதி 5

சிலர் மதவின்மேல் சரிந்து விழுந்திருக்கும் அணிஞ்சில் மரக்கொப்பில் ஏறி மரத்தை அடைந்து வீரவிளையாட்டு வித்தைகளும் காட்டுவார்கள். 

அதனைத் தாண்டி மயிலிட்டிச் சந்தியை நோக்கி நடக்கையில் இடது பக்கமாக காட்டுச் செடிகள் போன்று வளர்ந்திருக்கும் அன்னமின்னா மரங்களில் ஏறி பழங்களைப் பதம் பார்ப்பதோடு செங்காய்களைப் புத்தகப் பையினுள் நிரப்பிக் கொண்டு நடையைக் கட்டுவார்கள். 


மயிலிட்டிச் சந்தியை நெருங்கியதும் வலது, இடது பக்கங்களில் உள்ள புளியமரங்களிலும் பூ பூத்திருந்தால் அதையும்கூட எம் மாணவர்கள் விட்டுவைக்காமல் பறவைகள் போன்று கொத்திவிடுவார்கள். 

இறுதியாக மயிலிட்டிச் சந்தியில் வலது பக்கமாகவுள்ள மாணிக்கம் அண்ணையின் சைக்கிள்க் கடையையும் கண்ணகி படிப்பகத்தையும் தாண்டி சிவநாமம் அண்ணரின் துணிக்கடைவரை உள்ள மாணவர்களும், எதிரே துறைமுக ஒழுங்கைக்குள் இறங்கி கடற்கரை வரை உள்ள மாணவர்களும் நடந்து செல்வார்கள். 

இடது பக்கமாக சந்தியில் உள்ள மணியண்ணரின் சலூன், விதானையார் அவர்களின் உணவகத்தையும் தாண்டி பாலத்தடி நோக்கி சில மாணவர்கள் நடந்து செல்வார்கள். முருகன் கோவில் அம்மன் கோவிலுக்கு முன்பாக உள்ளவர்கள் சந்திக்கு எதிரே கடந்து வரும் ஒழுங்கையில் சென்று நடந்து செல்வார்கள். 

நாவலடி ஒழுங்கையைச் சேர்ந்த மாணவர்கள் பாலர் வகுப்புக் கட்டடத்தின் பின்பக்கத்து பனங்காணியால் நடந்து சென்று வரும் ஒழுங்கையின் ஊடாக நடந்து சோமர் அண்ணரின் தென்னங் காணியோரம் இடது பக்கமாக சிற்றோடை போன்ற குச்சொழுங்கையால் நடந்து ஏறி வலது பக்கமாக சிறிதுதூரம் செல்கையில் அங்கே உள்ள வீட்டாரின் மாங்காய்கள் சுவரின் பக்கமாக சரிந்து விழுந்திருந்தால் அதனையும் ஒருகை பார்ப்பார்கள்.

பாதிரியடைப்பின் நெசவடியைத் தாண்டி கற்கண்டு அண்ணரின் கடைக்கும் இடையில் உள்ள சிற்றோடையால் பிரதான வீதியை அடைவார்கள். எதிரே சோமரண்ணையின் கடையருகே உள்ள ஒழுங்கையின் ஊடாக கடற்கரை உள்ள மாணவர்கள் தமது வீட்டை சென்றடைவார்கள். 

பாதிரியடைப்பையும் திருப்பூர், காளவாய், அரசடி, பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த மாணவர்கள் எமது பாடசாலையின் பெரிய மைதானத்தின் பின்பக்கமாக நடந்து இடையில் சிறிய பனங்காணியைக் கடந்து சிறிய விளையாட்டு மைதானத்தையும் தாண்டி செல்கையில் வலது பக்கமாக உள்ள காணியின் (கொல்லச்சி) வேலியடியில் பெரிய அணிஞ்சில் மரம் உண்டு. அந்தமரத்தில் பல மாணவர்களும் போட்டி போட்டு ஏறி பழங்களை வேட்டையாடுவார்கள். அதனையும் தாண்டி இடது பக்கமாக பூநாறி மரங்களையும் தாண்டிச் செல்கையில் 

பகுதி 6
வலது பக்கமாக அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் கொல்லச்சி ஆச்சியின் நீண்ட பெரும் காணியின் அழகே தனி. அணிஞ்சில் மரத்தில் ஏறி நின்று பார்க்கையில் பக்கத்தே செக்கச்செவேல் போன்ற செம்பாட்டு மண்ணில் விளைந்திருக்கும் மரவள்ளி மரங்களைக் காணக் கண் குளிரும்.

அதன் பின்னே சிறிய வீடாக இருந்தாலும் அழகாகக் காணப்படும் சிவம் அண்ணர் ஞானி அக்கா அவர்களின் வீடு காணப்படும். அவர்களின் வீட்டின் வலப்பக்கமாக மாபெரும் புளியமரம் அட்டகாசமாய் காட்சிதரும். 

அதன்பின்னே தட்சிணாமூர்த்தி அண்ணரின் காணியின் முன் பக்கத்தில் மாமரக் காடு போன்றே காட்சி தரும் பலவிதமான மாமரங்களும், பின்னே முந்திரிகைத் தோட்டமும் ஏனைய காய்கறிவகைத் தோட்டமும் தெரியும். 

இதுபோன்றே அனைவராலும் தொப்பிக்கிளி அண்ணர் என்று அழைக்கப்படும் கிளி அண்ணர் அவர்களின் தோட்டமும் பெரிய விளையாட்டு மைதானம், சிறிய விளையாட்டு மைதானத்தின் பக்கமாக பலவிதமான பயிர் வகைகளையும் கொண்டு பார்க்க அழகு தரும். 

கொல்லச்சி ஆச்சியின் காணியின் பின்பக்கமாக சிறிய வீடாகக் காட்சிதரும் வீட்டிலேயே கொல்லச்சி ஆச்சி இருப்பார். அவரின் வீட்டுக்குப் பக்கத்திலும் பெரிய புளியமரம் ஒன்று உள்ளது. அதன் பக்கத்தே புளியும், ஒடியலும், பனாட்டும் பனையோலைப் பாயில்காயவிட்டிருப்பார். எமது சில மாணவர்கள் (அதில் நானும் ஒருவன்) சுண்டங்காய் பொறுக்குவதாகக் கூறிச் சென்று கொல்லச்சி ஆச்சியின் ஒடியலுக்கும், பனாட்டுக்கும், புளிக்கும் உலை வைத்துவிடுவார்கள்.

ஒருநாள் சனிக்கிழமை காலைப் பொழுதினிலே எனது சிறு வயதுப் பிராயத்தில் கொல்லச்சி ஆச்சியின் வீட்டுக்குச் சென்று என் சகமாணவர்கள் அனைவரும் உங்களுக்குப் பொய் கூறிவிட்டு சுண்டங்காய் பொறுக்கியதோடு  உங்களது ஒடியலும், பனாட்டும், புளியும் களவெடுத்துச் செல்வார்கள் என்று கூறினேன். அத்தோடு நான்மட்டும்தான் களவெடுப்பதில்லை என்று சத்தியம் பண்ணினேன் (முழுப் பொய்).

எனவே ஆச்சி என்னைப் பாராட்டியதோடு சுண்டங்காய் பொறுக்கவிட்டார். பின்னர் அவரின் வீட்டு விறாந்தையில்தான் நிலத்தில் அடுப்பும் இருந்தது. அப்போது மண் பானையில் சோறு காய்ச்சி கஞ்சி வடித்துக்கொண்டிருந்தார். 

என்னை அழைத்து தேங்காய் துருவிய சிரட்டையில் கஞ்சியும் கொறிக்கத் தேங்காய்ச் சொட்டும் தந்தார், நானோ பலகைக் குத்தியில் இருந்தவாறு மிகவும் ரசித்து ருசித்து சோற்றுக் கஞ்சியைச் சுவைத்தேன். 

இன்றுவரை எத்தனையோ உணவகத்தில் சூப் வகைகளை ருசித்துள்ளேன். ஆனால் அன்று கொல்லச்சி ஆச்சியின் கையால் வாங்கிக் குடித்த சோற்றுக் கஞ்சியின் ருசியை இன்னும் நான் சுவைக்கவில்லை என்பதோடு இப்படியெல்லாம் இயற்கையுடனும் சுற்றார் ஊராருடனும் உண்டு மகிழ்ந்து வாழ்ந்துவிட்டு இன்று வெளிநாட்டில் அகதியாக்கப்பட்டு, மொழி தெரியாமலும், மேல்மாடியிலும், கீழ்மாடியிலும் இருப்பவர் யாரென்றே தெரியாமல் வாழுகின்ற துர்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டதை நினைக்க மயிலை மண்ணில் சென்று அந்த மண்ணில் கீழ் விழுந்து முத்தமிட்டு வானதிரக் கதறி அழவேண்டும்போல் உள்ளது.

கொல்லச்சி ஆச்சியின் காணிக்கு எதிரே ஒரு கிணறு உண்டு. எமது பாடசாலையை அண்டி உள்ளவர்களில் கிணறு இல்லாதோர் அங்கே வந்துதான் குடும்பமாகக் குளித்துச் செல்வார்கள்.

மாலையில் கொல்லச்சி ஆச்சியின் காணிக்குள் பாதிரியடைப்பைச் சேர்ந்த பவளநாதன் (பவளம்) என்பவரும், சிவம் அண்ணர் அவர்களும், ரஞ்சன் அவர்களும் சிலம்பாட்டம் நடத்துவார்கள். 

கொல்லச்சி ஆச்சியின் காணியைத் தாண்டியதும் சோமர் அண்ணரின் தென்னங்காணி தெரியும். காணி எல்லையாக கிளுவை மரங்கள் காணப்படும். எமது பெரிய மாணவர்கள் காணிக்குள் புகுந்து கள்ள இளநீர் வேட்டையாடுவார்கள். சிறுவர்கள் காணிக்குள் உள்ள கிணற்றுக்குள் கற்களை வீசி கிணற்றை நிரப்புவார்கள். மற்றும் சிலர் கிளுவை மரத்தில் ஏறி பொன்வண்டுகளைப் பிடிப்பார்கள். பின்னர் அதனை நெருப்புப் பெட்டிக்குள் அடைத்துக்கொண்டு திரிவார்கள். பாடசாலை வகுப்பில் பொன்வண்டை புரட்டி வைத்துவிட்டு குத்துக்கரணம் அடிக்கவிட்டு அனைவருக்கும் வித்தைகள் காட்டுவார்கள். பொன்வண்டு இட்ட முட்டையையும் பெருமையாக அனைவருக்கும் காட்டி மகிழ்வார்கள். 


சோமர் அண்ணரின் காணியின் வலது பக்கமாக நேரே நடக்க சடாச்சரலிங்கம் அண்ணர் அவர்களின் காணியும் வீடும் தெரியும். அவர்களது காணிக்குள் முந்திரிகை மரங்களும் ஏனைய பயிர்வகைகளும் காட்சிதரும். மாலையில் பழங்களைக் கொத்துவதற்காக கிளிகளும் பறவைகளும் வட்டமடித்துக் கொண்டிருக்கும்.

அவர்களின் காணிக்குப் பக்கத்தில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருக்கும் ராசேந்திரம் அண்ணரின் வீடு காணி தெரியும். 

இடது பக்கமாகத் திரும்பி நடக்க வலது பக்கமாக கேணி என்றழைக்கப்படும் பெரும் காணி தெரியும். அங்கே பெரிய மஞ்சமுண்ணா மரங்களும் ஆமணக்க மரங்களும் அன்னமின்னா மரங்களும் காணப்படும். ஆங்காங்கே கொவ்வைக் கொடிகளும் மரங்களின் மேல் படர்ந்திருக்கும்.

மழைக்காலத்தில் தண்ணீர் வந்து தேங்கி நிற்பதால் அந்த இடத்தை எமது முன்னோர் கேணி என்று அழைத்து வந்தார்கள். 

கேணிக்கு முன்பு கொன்றைமரம் ஒன்று உண்டு அதன் கீழ் மரத்தில் சிலைவடிவம் போன்று இயற்கையாகவே உள்ளது. எனவே அங்கே வைரவர் குடியிருக்கின்றார் என்று அனைவரும் கொன்றை மரத்தடி வைரவர் என்று வணங்கிச் செல்வார்கள். மழைக்காலத்தில் கேணி நிறையத் தண்ணீர் நிறைந்து இருப்பதால் தவளைகள் நிறைந்து போடும் சத்தத்தில் காது அடைக்கும்.

வெயில் காலத்தில் கொன்றைமரத்தின் மஞ்சள் நிறப்பூக்களைப் பார்க்க நெஞ்சம் குளிரும். இடையிடை கொன்றைக் காய்கள் பயிற்றங்காய்கள் போல் நீளமாகவும் ஆனால் மொத்தமாகவும் தொங்கியிருக்கும் அழகை இரசிப்பது தனி அழகே!

கேணியைத் தாண்டிச் சென்று சிறு ஏற்றத்தில் நடந்து செல்ல பெற்றோல் செற் நிலையம் தெரியும். பக்கத்தில் குணம் அண்ணரின் ரெயிலர் கடையும் தெரியும். திருப்பூரைச் சேர்ந்த எனது சகமாணவ நண்பர்கள் இடது பக்கமாக நடந்து பின்னர் பிரதான வீதியைக்கடந்து மல்லிகைக்கண்டு ஆச்சியின் காணியின் பக்கமாக நேரே நடந்து செல்ல வாசகசாலை தெரியும். 

வலது பக்கமாக சித்தப்பா அண்ணர், குணபாலசிங்கம் அண்ணரின் வீடுகள் காணிகள் தெரியும்.வாசகசாலையோடு இடதுபக்கமாக நடந்து வலது பக்கம் திரும்பி நடக்கையில் பேய்ச்சியம்மன் கோவில் இடது பக்கமாகத் தெரியும். வலது பக்கமாக துரைசிங்கம் அம்மானின் வீட்டுடன் முடிவுற்று மடத்தடி தெரியும் வரை மாணவர்கள் நடந்து வீடு செல்வார்கள்.  



க. கௌசிகன் 

Picture

You've just received a new submission to your "மயிலை மண்ணில்" கௌசிகன்.

Submitted Information:பெயர்:
Amalraj Ananthasothy

மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்:
When I read this mess ,I remember our village myliddy.bcz I left in myliddy 10 yrs old. I fell much about my village guys.i don't know when we go back anyway thank very much to remember and write this.,,,,, 

You've just received a new submission to your "மயிலை மண்ணில் " கௌசிகன்.

Submitted Information:பெயர்:
jeeva jeeva uthayan

மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்:
வார்த்தைகளை மற்றவர்கள் வாசிக்கிறார்கள்
கவிஞன் மட்டுமே சுவாசிக்கின்றான்
அவர்களோடு நாமும் சுவாசிக்கின்றோம்.
கௌசிகன் எனது வீட்டின் தென்னை  மரத்தையும்
சோமர் கடையையும் பாடசாலையின் பிஸ்கற்றையும் நினைவு படுத்தியதற்கு நன்றிகள்!
உங்கள் ஒவ்வொரு படைப்பும்
எம்மையெல்லாம் மயிலை மண்ணுக்கு
கொண்டு சென்று வருகின்றது
வாழ்க வளமுடன்
நன்றிகள்
ஜீவா உதயன் 


    "மயிலை மண்ணில் "  கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit

எங்கள் மயிலை மண்....

அன்னையும் தந்தையும் வாழ்ந்த மண்
அலைகடல் ஆடிடும் எங்கள் மண்
தென்னையும் பனையும் சூழ்ந்த மண்
தெம்மாங்கு பாடிடும் மயிலை மண் 

கடலலையின் பேரிரைச்சல் காதில் கேட்க
கடல்மீன்கள் வாசம் நாசி தொட
நாம் கருக்கொண்ட பூமியே
முதல் வணக்கம். 

சாதிகள் பேதங்கள் இல்லாது
சமயங்களின் முரண்கள் இல்லாது
ஆலம்விழுதுகளாய் இணைந்திருந்தோம்
அடம்பன்கொடிகள் போல் திரண்டிருந்தோம் 

கொஞ்சம் கடற்காற்று
கொஞ்சும் சொந்தங்கள்
நெஞ்சம் நிறைந்து நாம்
நீடூழி வாழ்ந்திருந்தோம் 


கூத்துடனும் பாட்டுடனும் கொண்டாடி
வீரமும் அறமும் வளர்த்து
கடலும் கரையும் பயிரும் பச்சையும் பார்த்திருக்க
பாசத்துடன் வாழ்ந்திருந்தோம்

 பார்த்த முகங்களே பழகிய உறவுகளே
இந்நாளில் நீங்கள் எங்கேயிருப்பினும்
ஊரோடு கூடுங்கள்
ஒன்றாக வாழுவோம்.


-----  சங்கீதா தேன்கிளி

    "எங்கள் மயிலை மண்.... "  கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit
நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!
Hit Counter by Digits
© 2011-22 myliddy.fr