"கடல் அன்னை"
மயிலைக்கடல் அன்னையே கொஞ்சம் நில்லு எம்மவர் சோகம்தனை கொஞ்சம் கேள்! உன் மடியில் தவழ்ந்தவர்கள் நாம் உந்தன் தாலாட்டில் வளர்ந்தவர்கள் உந்தன் ஈரக்காற்றினில் நனைந்தவர்கள் உந்தன் தென்றலில் பாட்டு இசைத்தவர்கள் எங்களின் நீலக் கடல் உனையிழந்தோம் நீலக்கடலில் மீன்பிடிக்கும் எம்மவர்களின் உழைப்பினையிழந்தோம் படகோட்டிக் கரையேறும் எம்மவர்களின் வீரம்தனைப் பார்ப்பதனையிழந்தோம் வானத்தில் வட்டமிடும் பருந்துகளின் அழகினையிழந்தோம் துறைமுகத்தில் துள்ளிக் குதித்து குளித்திடும் மகிழ்ச்சியினை இழந்தோம் தக்கிணி பொறுக்கி சுட்டுச் சாப்பிடும் மகிழ்ச்சியினை இழந்தோம் சுவையேற்றும் கருவாட்டு வாசனையை இழந்தோம் நண்பர்களுடன் கரை மணலில் உருண்டு புரளும் மகிழ்ச்சியினை இழந்தோம் கடல் அன்னையே கொஞ்சம் நில்லு எம்மவர் சோகம்தனை கொஞ்சம் கேள்! ஆண்டவனின் பித்தலாட்டத்தினால் எட்டுத் திசையெங்கும் பரந்தோடினோம் திக்கெட்டும் திசையெங்கும் கடலினைத் தேடியலைந்தோம் குளித்துக் கும்மாளம் போட்டோம் குடித்து வெறித்தோம் ஆடினோம் பாடினோம் சூரியக் குளியலும் எடுத்தோம்.. இருந்தும் உன் மடியில் குளித்த சந்தோசம் ஏனோ கிட்டவில்லை சுடு பாணும் சுடு இறைச்சிக் கறியும் சாப்பிட்டோம் சுற்றம் புறமுள்ளவர்களுடன் சுற்றித் திரிந்தோம் சுண்டியிழுக்கும் உந்தன் அழகினை எட்டமுடியவில்லை என்றுதான் உந்தன் மடியினில் தவழ்ந்திடுவோம்? உந்தன் தென்றல் இசைக் கீற்றினைக் கேட்போம்? பாரெங்கும் பரந்திருக்கும் உன் மன்னவர்கள் நாம் மகிழ்ந்து விடுவோம் மயிலை நீலக் கடல் அன்னையே! ச. சாந்தன் பதிவு: 18/11/12
|
You've just received a new submission to your "கடல் அன்னை"- சாந்தன்.
Submitted Information:பெயர்: Justin Thevathasan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: தம்பி சாந்தன் உங்கள் கடல் அன்னை கவிதை மிகவும் அருமை . தொடர எனது வாழ்த்துக்கள் ! பதிவு: 23/02/2013 You've just received a new submission to your "கடல் அன்னை"- சாந்தன்.
Submitted Information:பெயர்: சுந்தரலிஙம் வி மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: சாந்தனின் பதிவினைப்படித்தேன்.புல்லரிக்கிறது. பாராட்டுக்கள்.தொடர்ந்து எழுங்கள். உங்கள் சந்தோசத்திற்காக ஒருவேளை மயிலைக்கடல் அன்னை மீண்டும் வழிவிட்டால் உங்கள் நிலை................? பதிவு: 27/11/2012 |