மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி.....
மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி
சன்னங்களால் துளைக்கப்பட்டது ஓர்நாள்
மன்னர்கள் எம் பாட்டன் முப்பாட்டன்
வாழ்ந்த நிலம்
இனம் வளர்த்த நிலம்
பல்லுருவக்கடற்கரையும்
பாறைகளும் பாசிகளும்
நிலைத்து நிற்கின்றன அங்கே
நாம் தொலைத்து நிற்கின்றோம் எம்மை
ஆயிரம் ஊர்கள் பார்த்துவிட்டோம்
அறுபது நாடுகள் சுற்றிவிட்டோம்
ஆலயக் கதவுகள் தட்டிவிட்டோம்
நிம்மதி என்பதில்லை மனதில்
நெஞ்சில் படிந்திருக்கிறது வெறுமை
வந்த நிலங்கள் வரவேற்றாலும்
எங்கள் நிலத்தின் சுகம் இல்லை
வெந்து போகின்றது மனம்
சொந்த நிலத்தின் நினைவினிலே...
----- சங்கீதா தேன்கிளி
சன்னங்களால் துளைக்கப்பட்டது ஓர்நாள்
மன்னர்கள் எம் பாட்டன் முப்பாட்டன்
வாழ்ந்த நிலம்
இனம் வளர்த்த நிலம்
பல்லுருவக்கடற்கரையும்
பாறைகளும் பாசிகளும்
நிலைத்து நிற்கின்றன அங்கே
நாம் தொலைத்து நிற்கின்றோம் எம்மை
ஆயிரம் ஊர்கள் பார்த்துவிட்டோம்
அறுபது நாடுகள் சுற்றிவிட்டோம்
ஆலயக் கதவுகள் தட்டிவிட்டோம்
நிம்மதி என்பதில்லை மனதில்
நெஞ்சில் படிந்திருக்கிறது வெறுமை
வந்த நிலங்கள் வரவேற்றாலும்
எங்கள் நிலத்தின் சுகம் இல்லை
வெந்து போகின்றது மனம்
சொந்த நிலத்தின் நினைவினிலே...
----- சங்கீதா தேன்கிளி