பூமிக்கு வந்த புது மலரே...பூமிக்கு வந்த புது மலரே...
இந்தப் பாருக்கு வந்த துளிர் அழகே... உந்தன் தாயிற்கு வந்த பெருமகனே... மகளே... அன்பே... என் அன்பே... வா... பசுமை நிறைந்து கிடந்த உலகம் இன்று பாழாய்ப் போனதேன் கலகம்... கலகம்... பொன் விளைந்த மண்ணாம் அன்று... அன்று... இன்று பூகம்பம் சுழலுது கொன்று... கொன்று... பூமிக்கு வந்த புது மலரே...இந்தப் பாருக்கு வந்த துளிர் அழகே... பள்ளிக்குச் சென்று பண்பாய்ப் பழகு... பாவம் செய்வார்களைக் கண்டால் விலகு... வேகம் கொண்டு நீ சாதனை செய்திடு... வேதனை தரும் செயல் செய்யாதிருந்திடு... பூமிக்கு வந்த புது மலரே...இந்தப் பாருக்கு வந்த துளிர் அழகே... கல்விச் செல்வத்தைக் கவனமாய்க் கற்றிடு... காதல் வலையில் சிக்காதிருந்திடு... போதை சூது பெண்பித்து மறந்திடு... மோதல் கொள்வாருடன் உறவினை அறுத்திடு... பூமிக்கு வந்த புது மலரே...இந்தப் பாருக்கு வந்த துளிர் அழகே... சாதி, சீதன, மதவெறியினைக் களைந்திடு... மனித இனத்துடன் இன்புடன் பழகிடு... அறவன்பு வழிகளில் அன்பாய் வாழ்ந்திடு... அடிதடி வன்முறை அறவே கைவிடு... கைவிடு... பூமிக்கு வந்த புது மலரே...இந்தப் பாருக்கு வந்த துளிர் அழகே... அன்பில் பண்பில் பணிவில் திழைத்தோம்... இன்று போர்கொண்ட உலகில் நிம்மதி தொலைத்தோம்... வந்தோரை வாழ்த்தி வாரிக்கொடுத்தோம்... இன்று வறுமையில் மெலிந்து எரிந்து தொலைந்தோம்... பூமிக்கு வந்த புது மலரே...இந்தப் பாருக்கு வந்த துளிர் அழகே... உன்போல் அழகாய் அமைதியாய்ப் பிறந்தேன்... அன்பாய் அமைதியாய் வாழத் துடித்தேன்... பாவிகள் உலகில் அன்பின்றி அலைந்தேன்... இன்று அவதியாய் அவலமாய் வாழ்கின்றேன் வெறுப்பில்... பூமிக்கு வந்த புது மலரே...இந்தப் பாருக்கு வந்த துளிர் அழகே... க. கெளசிகன் பதிவு: 17/08/2012 |
You've just received a new submission to your "பூமிக்கு வந்த புது மலரே" கௌசிகன்.
Submitted Information:பெயர்: jeyarany norbert மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: பூமிக்கு வந்த புதுமலர், குறிப்பாக இளஞர்களை மேம்படுத்தும் வகையில் அழகாக மலர்ந்துள்ளது வாழ்த்துக்கள். பதிவு: 27/04/2013 |
|