மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்
    • மயிலிட்டி கோவில் பாடல்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
        • கிளாலி பயணம்
        • முறிகண்டி பிள்ளையார்
        • "காலங்கடந்த ஞானமிது"
        • "கோரத் தாண்டவம்"
        • "காலப் பெருவெளியில்"
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • .

"வீச்சுவலை"

Picture
நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
காலை விடியும்... காளவாய்ப் பக்கமாய் கதிரவனெழுவான்...
முன்தின மாலையில் சென்ற மீனவர்கள் மெல்ல மெல்ல 
சிறு துளியாய்.. சிறு படகாய்.. கட்டுமரமாய்.. வள்ளமாய் வருவது தெரியும்.
மணவாளனை.. மகனை.. காணத்துடிக்கும் இதயம் துடிதுடிக்கும்.....
படகு கண்டு, மகிழ்ச்சி கொண்டு பெருமூச்சு விடுவாள் பெண்ணவள்...

சோடாப் போத்தலினுள் தேனீரும், கடதாசிப் பையினுள் பொரிவிலாங்காயும் 
காத்திருக்கும் கரைதனில்... மீனவன் வருகைக்காக ... 
கடலினில் படகின் கடவாய்ப் பகுதித் தண்ணீரில் 
பாறை மீன் துடிதுடிக்கும் மதிய உணவிற்க்காக... 

படகு கரைதட்டும்... வானில் காகங்கள் சேர்ந்து கைதட்டும் 
மனைவியின் பாசப் புன்முறுவலில் தன் களைப்பாறுவான் கணவன் 
இன்றைய பாடு எப்படி? என்று வேல்விழியால் கேள்வி கேட்க ...
பரவாயில்லை என்று புன்னகையால் பதிலுரைப்பான் கணவன். 

மீன் தெரிக்க ஐந்தாறுபேர் காத்திருப்பார் கரையினில்... 
வலைபிடித்து மீன்தெரித்து அனைவரும் முடிக்கையில் 
ஊர்நடப்பும், உலகநடப்பும் கதையளந்து முடிப்பார் 
இடையிடை கூடை நிரம்பிய மீன்களுடன் மனைவிமார் 
காலில் செருப்புமின்றி சந்தையை நோக்கி நடந்து செல்வார். 

கோவில் மணியோசை மெல்ல மெல்ல ஒலிபெருக்கும் 
மதியம் மனைவியின் அன்புக்கரங்களால் மீன் குழம்பிற்கு...
சரக்கு அரைக்கும் அம்மிச்சத்தம் அக்கம் பக்கம் கேட்கும் 
கோவில் சென்று கும்பிட்டுவிட்டு வீடு திரும்புவார் அன்புக்கணவன் 
மனைவியின் அரைத்த பாரைமீன் குழம்பில் கிறங்கி போவானவன். 
உண்ட மயக்கத்தில் நிம்மதியாய் வெள்ளைமண்ணில் உறங்குவதற்கு 
மடத்தை நோக்கி கணவனின் கால்கள் நகரும்...
ஊரே பகலில் குட்டித்தூக்கம் போடும் வேளையில்.....
வீட்டின் திண்ணையில் சிறு தூக்கம் கொண்ட பெரியவர் 
துயிலெழுந்து தன் சோம்பல் முறிப்பார்............... 

வீச்சுவலை தனையெடுத்து கிளியல்களைப் பொத்துவார் 
பனையோலைப் பறியெடுத்து இடுப்பினில் இறுகக் கட்டுவார் 
தலை நனையாதிருக்க தலைவாரையைச் சுற்றி 
தலைப்பாகையை இருக்கமாய் கட்டிக்கொள்ளுவார்.

அன்புக்கிழவியின் (மனைவியின்) செல்லக்கரங்களால் 
பாக்கு, வெற்றிலை, புகையிலை, சுண்ணாம்பு வாங்கிக் கொள்வார் 
மாலைக் கதிரவன் அடிவானில் சாயும்வேளையில் 
பெரியவர் தன் கால்களை கடலுக்குள் வைப்பார்.

மானைக் கண்டு புலி பதுங்குவது போல் 
மடவைமீன் செவ்வல் கண்டு பெரியவர் பதுங்குவார் 
தக்க தருணம் பார்த்து வீச்சு வலையை வீசுவார் 
மெல்ல மெல்ல வலையை இழுப்பார் பெரியவர் 
அதனுள் துள்ளிக்குதிக்கும் மடவைக் கூட்டம் 
அதனை அள்ளிப் பறியினுள் இட்டபடி நடப்பார் 
அடுத்த வீச்சுக்கு...... அழகுக்கடலில்.......

பக்கத்தினில் உள்ள பாறைகளில் தக்குணி  பிடிக்க 
சிறுவர் கூட்டம் அலை மோதுவர் 
காலில் கவாட்டி வெட்டிய வேதனையில் 
சிலரின் அலறல் சத்தம் வானை எட்டும்
தக்குணி, மீன், நண்டு, சங்கு சுட்டு உண்ண 
இளைஞர் கூட்டம் வாடியின் கிடுகினைப் பிடுங்குவர் 

மாதா கோவிலின் பின்பக்கத்துத் தெருமுனையில் 
மாலையில் பெரியவர் மீன்களை விற்பார் 
வீச்சுமீன் விற்றகாசில் வரும் வழியில் அரைக்கால் அடிப்பார் 
வீட்டினில் ஆச்சி வீச்சுமீனில் குழம்பும், 
சொதியும், பொரியலும்,  புளியானமும் காய்ச்சி வைப்பார் 
அதற்கு நன்றியாக அப்பு ஆச்சிக்கு புகையிலை வாங்கிவருவார்.

அழகு இரவு அப்புவின் வீச்சுமீன் உணவுடன் 
அமைதியாய் குடும்பமே  இன்பம் காணும் 
ஆச்சி அப்புவின் சுருட்டுப் புகையில் 
நுளம்புத்தொல்லை தொலைந்தே போகும்.

நிலவு ஒளியில் கடற்கரை வெண்மணலில் மக்கள் இன்பம் காண்பார் 
கடல் காற்று வீசும் சுகத்தில் அவர்கள் துன்பம் மறப்பார் 
கச்சான் வறுத்து விடிய விடிய கதைகள் அளப்பார் 
அந்தநாள் தொலைந்து 21 வருடங்களா? 
இனி எந்நாளில் இவ் இன்பங்கள் எமக்கு வந்து சேருமோ? 
இங்கு வெளிநாடுதனில் பாரையும், அறக்குளாவும் 
உண்டு வாழ்ந்த பரம்பரை 
சந்தையில் மலிவுமீன் தேடியலைகின்றது...  யாரழுவார்?
ஐஸ் மீன் வாங்கியுண்டு நாக்குச் செத்துவிட்டது,
ஊரைப்பிரிந்துவந்து உடலும் மனதும் செத்துவிட்டது 
வெறும் வெற்றுடம்புடன் நடைபிணமாய் 
வாழுகின்றோம் நாம் இங்கு அகதியாய் அவலமாய்!

ஆக்கம்:  கௌசிகன்

    "வீச்சுவலை" கவிதைக்குரிய கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit

எங்கள் மயிலை மண் 

Picture
நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
நல்ல மண்ணதுவாம் நாற்புறமும் வளமதுவாம்
பொங்கு தமிழனின் பழமை ஊரதுவாம்
தெங்கு தேன்குளமும், பச்சைப் பயிர் நிலமும்
பொங்கு கடல் வளமும் கொண்ட ஊரதுவாக!

எங்கள் பூமியிலே ஏர் பிடித்து உழுதமண்
நீரிறைத்து, போரடித்து பொன்விளைந்த மண்ணை
பங்கம் வினைசெய்ய வந்த காடையர்கள்
ஏற்றிய படையதனால் மாண்டது 
எங்கள் மயிலை மண்!

வள்ளத்திலே வலையேற்றி வட்டமிட்டுச் சென்றதுவும்
கடல் வெள்ளத்திலே மீன் பிடித்து மீண்டும் கரை திரும்பியதும்
உள்ளத்திலே மகிழ்வெடுக்க என் மனையாள் பார்த்ததுவும் 
நெஞ்சமதில் நினைவெடுக்க மாண்டது
எங்கள் மயிலை மண்!

ஆழ்கடல்கள் எங்கும் அப்பனவன் போனதுவும்
நீலக்கடல் வெளியில் நீந்திநான் திரிந்ததுவும்
தூரக் கடலிடையே அச்சமின்றி அலைந்ததுவும்
மீள நினைவெடுக்க மாண்டது
எங்கள் மயிலை மண்!

சிங்களவன் இடையில் வந்து எங்கள் வலை(வாழ்வு)யறுத்ததுவும்
எங்களது கடற்பரப்பில் ஏங்கிநாம் திரிந்ததுவும்
மங்கையரின் மனம் வெதும்ப காளையர் கரையொதுங்கியதுவும்
உள்ளமதில் நினைவெடுக்க மாண்டது
எங்கள் மயிலை மண்! 

துயரங்கள் நினைவெடுக்க வெளிநாடுதனில் வாழ்கின்றோம்

நிமிருங்கள் பொங்கி உங்கள் கரங்களை இணைத்திடுங்கள்
முயலுங்கள் முயலுங்கள்...விடிவெள்ளி வருமொரு நாளில் 
காத்திருங்கள் எம்மண்ணில் வாழ்வதற்கு ஒருநாளில்.............


--- கௌசிகன் 



    "எங்கள் மயிலை மண்" கவிதைக்குரிய கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit

உன்னை
நேசிக்கப் பழகிக்கொள்!

Picture











உன்னை நேசிக்க பழகிக்கொள்........ 
ஏனென்றால்.....?
இது கலிகாலம்!
நீ கனகாலம் நேசித்த காதலி.......
உன்னைக் கைவிட்டுச் செல்லலாம்.
என்றும் உன் மனதில் நிறைந்த மனைவி
மாற்றானுடன் கை பிடித்துச் செல்லலாம்.
பாசமுடன் வளர்த்த பிள்ளைகள்
பிசாசுகளாக மாறலாம்.
நண்பன் எதிரியாகலாம்.
நட்பு பகையாகலாம்.
உறவுகள் பிளவுகளாகலாம்.
உணர்வுகள் மரத்துப்போகலாம்.
உண்மை சாகலாம்.
தர்மம் தற்கொலை செய்யலாம்.
நியாயம் நிலையற்றுப்போகலாம்.
அன்பு அறவே அற்றுப்போகலாம்.
இதற்கெல்லாம் கலங்காதே!............
நடைமுறையில் நடப்பவைகளே இவை.
மற்றவர்கள் உன்னைப்பற்றி எண்ணாத போது?
நீ ஏன் அவர்களைப்பற்றி எண்ணுகின்றாய்?
மற்றவர்கள் உன்னை நேசிக்காதபோது,
நீ ஏன் இவர்களை நேசிக்கின்றாய்?
இது கலிகாலம்.......
இக்காலத்திற்கும்,
இக்கால இயந்திர மனிதர்களுக்கும் 
ஏற்றாற்போல் 
வாழப்பழகிக்கொள்.
மற்றவர்களை நேசி ......
அதற்காய்.....
உன்னைவிட அதிகம்
அவர்களை நேசித்து
அவர்களுக்காய் உயிரை விட்டுவிடாதே....
எனவே..........உன்னை நேசிக்கப் பழகிக்கொள்
ஏனென்றால் இது கலிகாலம்!
                                                                                ---  கௌசிகன்.



மனைவி விவாகரத்து...!  
இவன் உயிர் துறந்தான்...!

Picture











ஐந்து வருடக் காதல்
அகவையோ முப்பத்தைந்து 
திருமணமாகி நான்கு வருடம்
முத்தான மூன்று குழந்தைகள் 
மனைவியோ விவாகரத்து
விரக்தியின் விளிம்பில் அவன்
அவளை மறக்க...
அவனின் முயற்சி இமயம்
இறுதிவரை அவனால்...
அடிவாரத்திற்க்குக்கூட
செல்லமுடியவில்லை....
மணப் புண்ணை ஆற்ற 
புகையடித்தான்,
தண்ணியில் மிதந்து கிடந்தான்
போதைவஸ்த்து.........
வேறு இடம்
வேறு வீடு
வேறு மனிதர்கள்
வேறு நாடு
வேறு எண்ணம்
என எவையும் அவனை மாற்றவில்லை.
இவ்வளவு நடந்தும் 
இல்லறத்தில் அவன் செய்த
நன்மைகளை எண்ணி 
இன்பம் காணும் அப்பாவி அவன்.
துரோகக்கணைகளால் 
அவன் இதயம் 
சின்னாபின்னமாகி விட்டது
வெறும் வெற்றுடம்புடன்
நடைபிணமாய்....
உலாவியவன்....
அவளை மறக்க
எம் முயற்சியும் 
பலனின்றி
இன்று தற்கொலை முயற்சியில் 

வென்று
வாழ்க்கையில் தோற்றுப்போனான். 


                                                                                ---  கௌசிகன்.

இங்கு பதிவு செய்யப்படும் அனைத்து ஆக்கங்களுக்கும் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.
உங்களால் பதிவுசெய்யப்படும் கருத்துக்கள் நேரடியாக உரியவர்களுக்குச் சென்றடைய 
தொடர்பு ஏற்ப்படுத்தப் பட்டிருக்கின்றது.
Powered by Create your own unique website with customizable templates.