"பாட்டன் வழி நிலம் வேண்டும்"
முற்றத்து வெளியில் விளையாடி முடித்து முல்லை நுகர்ந்தபடி மயங்கியிருக்கும் அந்தியிலே முப்பாட்டன் கதைகள் கண்ணகல முத்து முத்தாய்க் கேட்டிட வேண்டும் பட்டான மணற் பரப்பு அப்படியே வேண்டும் படர்ந்தோடக் கால்கள் அதில் பதிய வேண்டும் சுட்டெரிப்பில் நெற்றி துளிர்க்க வேண்டும் தொட மறந்த தென்றலும் தொட்டுச் செல்ல வேண்டும் தென்னையி ளஞ்ச்சாறு தேனாய்ப் பருகிட வேண்டும் தொன்மைக் கற்பகம் தரணியில் பரப்பிட வேண்டும் தொன்று தொட்ட வைத்தியம் பயிலல் வேண்டும் தொலையாமல் இயற்கை காத்திடல் வேண்டும் தெள்ளிய நீர் துலாவி லிறைக்க வேண்டும் தெவிட்டாத சத்துணவு ஆக்க வேண்டும் தெருவெல்லாம் விழாக் காண வேண்டுமதில் தேன்தமிழ் துள்ளிக் குதிக்க வேண்டும் கனவு விருட்சங்கள் புரிந்திட வேண்டும் வன வாசம் சென்றவர் நினைவுகள் வேண்டும் மனமுருகி கண்ணீர் சொரிந்திட வேண்டும் மறத் தமிழர் வீரம் பேசி வாழ்த்திட வேண்டும் போகாத தெரு வெங்கும் புகுந்துவர வேண்டும் புதுமை ஏதும் புகுத்தும் வழி தேடல் வேண்டும் பேசாப் பொருள் அலசிப் பார்க்க வேண்டும் பண்டைத் தமிழ் செல்வம் பெருக்க வேண்டும் கண்டறிந்த அறிவதனைப் புகுத்த வேண்டும் கடுகதியில் கனவுகள் பெருக்க வேண்டும் எங்கணுமே ஏற்றம் காணல் வேண்டும் எதிலுமே வெற்றியே தோன்றல் வேண்டும் கேள்விகள் வெளியிடை வைத்தல் வேண்டும் நேர்பட நின்று பேசிடல் வேண்டும் எம் சந்ததி செந்தமிழில் செங்கனலாய் முழங்க வேண்டும் செயலிடை வைக்கவோ மூதாதையர் நிலம் வேண்டும் சொந்தப் பாட்டன் வழி நிலம் வேண்டும். வி.அல்விற் பதிவு: 16/03/2013 |
|
|
sountha Dr. ஜேர்மன்
You've just received a new submission to your "பாட்டன் வழி நிலம் வேண்டும்".
Submitted Information:பெயர் sountha Dr மின்னஞ்சல்: @ கருத்துக்கள் செந்தமிழில் செங்கனலாய் முழங்க வேண்டும் செயலிடை வைக்கவோ மூதாதையர் நிலம் வேண்டும் சொந்தப் பாட்டன் வழி நிலம் வேண்டும். மண்வாசம்............ உயிரின் சுவாசம்..... கவிக்குயில் அல்விற்றிற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும். பதிவு: 27/04/2013 |