"கவிஞர்களே"
என் இந்தத் திடீர் மௌனம் உங்களுக்குள்ளே?
கவிஞர்களே! படைப்புக்களை தென்றலாகவும் புயலாகவும் புதிது புதிதாய் பிறப்பிப்பதே நீங்கள்தானே! நீங்களே தூங்கினால் நாளைய பொழுதுகளில் நம்பிக்கையை யார் கொடுப்பது? நீண்ட இரவுகளின் இராச்சியத்துக்கு உங்கள் இமைகளை இணைய அனுமதிக்காதீர்! கசியும் உங்கள் கண்களைத் துடையுங்கள் கரையைத் தழுவும் ஒவ்வொரு அலைகளுடனும் பேசுங்கள்! அலைகள உரசும் காற்றுடன் உரையாடுங்கள்! கவிஞர்களே! தயவு செய்து உங்கள் மௌனங்களை உடையுங்கள் அன்பானவர்களே உங்கள் பேனாக்கள் உங்களது கற்பனையோடு துளித்துளியாய்க் கரையட்டும்!!!!! ஜீவா உதயம் |
You've just received a new submission to your "கவிஞர்களே" - ஜீவா உதயம்.
Submitted Information:பெயர்: சுந்தரலிங்கம் வி மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: ஜீவாவை கவிஞராக அறிவதில் சந்தோசப்படுகிறேன். "கவிஞர்களே" படைப்பு அற்புதம்.இன்னும் எழுது. பதிவு:30/11/2012 |