"அம்மா!"
வலியினையும் பாராமல் பத்துத் திங்கள் என்னைதன்
கருவறையில் சுமந்தவள் அம்மா! ஆராரோ ஆரிரோ பாடித் தூங்கச் செய்தவள் அம்மா! குயவன்போல் என்னை அழகுபடுத்த முனைந்திடுவாள் அம்மா! தன் இரத்தத்தினைப் பாலாகப் பாசத்துடன் ஊட்டுபவள் அம்மா! பாலுடன் அன்பு, பாசம், பரிவினையும்சேர்த்து ஊட்டுபவள் அம்மா! தன் உயிரிலும் மேலாக என்னைக் காத்திடுபவள் அம்மா! தன் குழந்தையின் புன்சிரிப்பினைக் கண்டு பூரித்திடுபவள் அம்மா! கதைகள், பாட்டுக்கள் பாடி குழந்தையினை அறிவாளியாக்கிடுவாள் அம்மா! தன் குழந்தை உலகம் போற்ற வளர்ந்திட தன் உயிரினையும் கொடுத்திடுவாள் அம்மா! கல்லறை சென்ற பின்னும் கருவறையில் சுமந்தவனை நினைத்திடுபவள் அம்மா! ச.சாந்தன்
|
You've just received a new submission to your
"அம்மா!- சாந்தன்". Submitted Information:பெயர்: Justin Thevathasan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: எனக்குதெரிந்த மூன்றெழுத்து கவிதை அம்மா! அதை இவ்வளவு அழகாக எழுதிய தம்பி சாந்தனுக்கு எங்களுடைய பாராட்டுக்கள், தொடர வாழ்த்துக்கள்! |