"புத்தாண்டே வருக 2013"
புதுப் பொலிவு தந்திடும் புத்தாண்டே வருக !
முத்தமிழ் பொங்கிடும் புத்தாண்டாக வருக ! முக்கனி தந்திடும் புத்தாண்டாக வருக ! காதல் பொங்கிடும் புத்ஆண்டே வருக ! கருணைகள் உயர்ந்திடும் புத்ஆண்டே வருக ! ஆன்மீகம் மலர்ந்திடும் புத்ஆண்டே வருக ! மனித நேயம் மலர்ந்திடும் புத்ஆண்டே வருக ! சிந்தனையை தெளிவுபடுத்தும் புத்தாண்டாக வருக ! நன்மைகளை செய்யத்தூண்டும் புத்தாண்டாக வருக ! தீமைகளை ஒழித்திடும் புத்தாண்டாக வருக ! அநீதிகளைத் தட்டிக்கேட்கும் புத்தாண்டாக வருக ! ஏழைகளுக்கு உதவிடும் கருணை நிறைந்த புத்தாண்டாக வருக ! பொய்மையினை ஒளித்திடும் புத்தாண்டாக வருக ! மெய்மைகள் நிறைந்த புத்தாண்டாக வருக ! நேர்மையாக ஆட்சி நடக்கும் புத்தாண்டாக வருக ! சமாதானம் எங்கும் நிலவும் புத்தாண்டாக வருக ! மயிலை ச.சாந்தன்
|
|