போராட்டம்!
விந்தணுவில் தொடங்கி கருவாக அடையும் வரை போராட்டம்!
சிசுவாகிப் பூமித்தாயிடம் வந்தடையப் போராட்டம்! மழலையாகி மழலை மொழிபேச, தவள, நடக்கப் போராட்டம்! குழந்தையாகி வாழ்க்கைச் சுமையினைப் பழகிக்கொள்ளப் போராட்டம்! சிறுவனாகிக் கல்வியெனும் அறிவினைப் பெற்றுவிடப் போராட்டம்! இளைஞனாகி காதல் எனும் பூந்தோட்டத்தில் பூப்பறித்து முகர்ந்துவிடப் போராட்டம்! அப்பாவாகி வாழ்க்கைச் சுமையினைத் தாங்கமுடியாமல் தொடர்ந்தும் வாழ்க்கையினை இன்பமாக வாழ்ந்திடப் போராட்டம்! வயோதிபனாகி உறவுகளை பிரிந்துவிடாமல் உறவாடி வாழ்க்கையினை முடித்துவிடப் போராட்டம்! ...................ச.சாந்தன் (04/05/2012)
|
|