அழகழகாய் கவி சொன்னாலும் ஆயிரம் பொய் சொல்லி வர்ணித்தாலும் உன் போலே ஒரு கவிதை வார்க்க என்னால் இயலாது !!! உயிர் வலியை உனதாக்கி என்னை ஈன்றெடுத்தாய் அதனால் ஏனோ உனக்கும் சேர்த்து அழுது கரைந்தே ஜனனம் எடுத்தேன் !! சுற்றி நிற்கும் உறவுகள் என் பக்கம் நிற்காமல் போனாலும்
மூச்சுள்ள வரை உன் வசம் என்னை வைத்துக் கொள்வாய் அறிவேன் நான் !!! என் நிழல் கூட சில கணம் தள்ளி போகலாம் , எனை விட்டு உன் நினைவுகளை சற்றும் நகர்த்திக் கொள்ள மாட்டாய் , கோபத்தில் உனை தூக்கி எறிந்தாலும் நீ சாப்பிடக் கூப்பிடாமல் ஒரு இரவும் கழியாது !!!! , ஜீவா உதயன் . பதிவு: 30/03/2013