"மயிலை மண்ணே ...."
நீ தாய்மை எனும் உணர்வுகொண்டு எங்களை...
உந்தன் முந்தானையில் பாசத்துடன் தாலாட்டி அரவணைத்தாய்! நாம் பெற்ற இன்பங்களால் பூரித்து நின்றாய் அன்று நம்மவர் பெற்ற வெற்றிகளால் கண்பட்டதோ? உன்னை அன்னியனுக்குத் தாரைவார்த்துவிட்டு உயிரே துச்சமென அகதியானேன்! உன் அரவணைப்பில் அச்சம் மறந்து இலட்சம் கனவு கண்டவர் உன் மைந்தர்கள்! இன்று இலட்சம் தேடும் பித்தர்களின் நாட்டில் பித்தர்களாக...... ச. சாந்தன்
|