"உலக பெண்கள் தினம்" தாய்மை எங்கள் இயற்கை வரம் தேடாமல் வாங்கி வந்த வரம் இதுவொ ன்றுக்கே தலை சாய்த்து வணங்குகிற துலகம் அன்புக்கும் பாசத்துக்கும் அணையில்லா நேசத்துக்கும் பொறுப்பாளிகள் நாங்கள் அமைதிக்கு இலக்கணம் பொறுமைக்கு மாதிரிகள் மென்மைக்கு மேன்மைகள் பொறிக்கப்பட்ட அடையாளங்கள் எழுதப்படாத விதிகளின் கீழ் பன்முகமாய் விசாலப்படுகிறது உலக முதல் படைப்பாளிகள் நாங்கள் எங்கள் வலிகளுக்கும் படைப்புக்கும் விலை பேச முடியாத அகங்காரிகள் ஆண் பெண் படைப்பினத்தின் உலக முதற் போராளிகள் சினந்தெழும் வீரர்களின் சிதைவுகள் தடுக்கும் மந்திரிகள் பொய்மைகளை அழிப்பதில் பெருஞ்சூறாவளி அமைதிக்காய் அடங்குவதில் அடிமையாய் அடங்காமையில் அச்சமூட்டும் எரிமலைகள் இயலாமை இழிசெயல் உமிழ்வோரில் கனன்று தீ மூட்டுபவர்கள் எதுவந்து எமைச் சூழ்ந்திடினும் எஃகுவாய் நிற்பவர்கள் உடலத்தின் பலவீனம் மலினப்படுத்தப் படும்போது உங்கள் அவமான முகமூடிகள் கிழித்தெறிந்து சிரிக்கும் குறியீடுகள் நாங்கள் உங்கள் மதிப்பீடுகளில் மதிப்பிழந்து உணர்வுகள் மதிக்கப்படப் போராடும் உலகத் தனி யினம் நாங்கள் காட்டாறாய் ஓடி பெருமழையாய் பெய்து கடலிடம் கலக்கையில் எங்கள் பெயர்கள் வரையப் பட்டுக் கொண்டேயிருக்கும் வி.அல்விற் 08.03.2013. |
|
|