"வசந்தம்"
கோடை இலைகள் நிறம்மாறி மஞ்சளாய் செந்நிறமாய் தன் இருப்பிடம் கழன்று ஒவ்வொன்றாய் வீழ்வதிலிருந்து உடம்பை ஊடறுக்கும் காற்று மாற்றம் அறிவிக்கிறது வீழ்ந்தவைகள் மிதிபடுவதை கவனிப்பார் அநேகரில்லை சில்லிடும் குளிர் நிலமும் வெண்பனி மூடல்களும் அவற்றுக்குத் துன்பமில்லை தன்னிலை இழந்து மண்ணோடு மக்குவதில் சிரமமேதுமில்லை அதிலிருந்து ஒரு செடி முளைத்து மணம் வீசும் மலர் முகர்ந்து வியக்கையில் நிறைவடைந்து மகிழும்போது வசந்தத்தின் மரங்கள் துளிர்விடத் தொடங்குகின்றன.... அல்விற் V பதிவு: 13/03/2013 |
|