"புத்தாண்டே வருக!"
வருக வருக நல் இனிய புத்தாண்டே வருக!
புவியெங்கும் நாதியற்றுத் திரிபவர்களுக்கு நின்மதி தரும் ஆண்டாக வருக! போட்டி பொறாமைகளை ஒழித்து நேசபாசங்களுடன் வாழும் ஆண்டாக வருக! தாயிடம் பால் குடிக்கும் குழந்தைபோல கள்ளம் கபடமற்ற ஆண்டாக வருக! கடலோடு அள்ளிச் செல்லும் சுனாமியாக வேண்டாம் பிரிந்தவர்களை ஒன்றுசேர்க்கும் ஆண்டாக வருக! இறந்தவர்களை சாந்திப்படுத்தும் ஆண்டாக வருக! உண்மையினை மண்ணோடு மண்ணாகப் புதைத்திடும் ஆண்டாக வேண்டாம் விதையிலிருந்து முளைவிட்டு தழைத்திடும் பயிர்போல் உண்மையினை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் நல்லாண்டாக வருக! உலகின் பசிபட்டினியைப் போக்கிடும் நல்லாண்டாக வருக! சிறகடித்துப் பறந்திடும் பறவைபோல் எதுவித தடைகளுமின்றி சுதந்திரக் காற்றினைச் சுவாசித்திடும் ஆண்டாக வருக! தாயைப்போல் எல்லோரையும் அரவணைத்திடும் நல் இனிய ஆண்டாக வருக! ச. சாந்தன்
|
|