"சிந்தனை வரிகள்"
சந்தோசத்தையும் இன்பங்களையும் அளவோடு அனுபவித்துக்கொள்!
துன்பங்களையும் துயரங்களையும் அடியோடு மறந்துவிடு! தாகங்களையும் ஏக்கங்களையும் முடிந்த்தவரை தணித்துவிடு! காமங்களையும் களவுகளையும் மனதிலிருந்து களைந்துவிடு! அறிவையும் பண்பையும் வளர்த்துவிடு! பாசத்தையும் பரிவையும் பகிர்ந்துவிடு! காதலையும் கருவறையையும் மறந்துவிடாதே! ஆசானையும் அம்மை அப்பனையும் புகழ்ந்துவிடு! பொன்னையும் பொருளையும் சேமித்துவிடு! பெண்ணையும் பொக்கிஷத்தையும் பாதுகாத்துவிடு! மழலைகளும் மனங்களும் கோணாமல் நடந்துகொள்! சாவையும் சரித்திரத்தையும் தூற்றிவிடாதே! ஊரையும் உறவுகளையும் கருவறுத்துவிடாதே! வீரர்களையும் விளையாட்டுக்களையும் உயர்த்திவிடு! கோபங்களையும் வீண்புகழையும் வீணடித்துவிடு! சவால்களையும் சாதனைகளையும் சந்தித்துக்கொள்! சிந்தனைகளையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்! நண்பர்களையும் நல்லாற்றல்களையும் நலத்துடன் பேணிக்கொள்! நற்கருத்துக்கள் கூறுபவர்களையும் நல்லாற்றல் கொண்டவர்களையும் பணிவுடன் ஏற்றுக்கொள்! உழைப்பையும் உறக்கத்தையும் மறந்துவிடாதே! எல்லோரும் நலமுடன்வாழ வாழ்த்தப்பழகிகொள்! புறம்பேசுவதையும் புறம்காட்டுவதையும் புறக்கணித்துவிடு! ..............ச.சாந்தன் (22/04/2012)
|
|