எங்கள் மயிலை மண்நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
நல்ல மண்ணதுவாம் நாற்புறமும் வளமதுவாம்
பொங்கு தமிழனின் பழமை ஊரதுவாம் தெங்கு தேன்குளமும், பச்சைப் பயிர் நிலமும் பொங்கு கடல் வளமும் கொண்ட ஊரதுவாம்! எங்கள் பூமியிலே ஏர் பிடித்து உழுதமண் நீரிறைத்து, போரடித்து பொன்விளைந்த மண்ணை பங்கம் வினைசெய்ய வந்த காடையர்கள் ஏற்றிய படையதனால் மாண்டது எங்கள் மயிலை மண்! வள்ளத்திலே வலையேற்றி வட்டமிட்டுச் சென்றதுவும் கடல் வெள்ளத்திலே மீன் பிடித்து மீண்டும் கரை திரும்பியதும் உள்ளத்திலே மகிழ்வெடுக்க என் மனையாள் பார்த்ததுவும் நெஞ்சமதில் நினைவெடுக்க மாண்டது எங்கள் மயிலை மண்! ஆழ்கடல்கள் எங்கும் அப்பனவன் போனதுவும் நீலக்கடல் வெளியில் நீந்திநான் திரிந்ததுவும் தூரக் கடலிடையே அச்சமின்றி அலைந்ததுவும் மீள நினைவெடுக்க மாண்டது எங்கள் மயிலை மண்! சிங்களவன் இடையில் வந்து எங்கள் வலை(வாழ்வு)யறுத்ததுவும் எங்களது கடற்பரப்பில் ஏங்கிநாம் திரிந்ததுவும் மங்கையரின் மனம் வெதும்ப காளையர் கரையொதுங்கியதுவும் உள்ளமதில் நினைவெடுக்க மாண்டது எங்கள் மயிலை மண்! துயரங்கள் நினைவெடுக்க வெளிநாடுதனில் வாழ்கின்றோம் நிமிருங்கள் பொங்கி உங்கள் கரங்களை இணைத்திடுங்கள் முயலுங்கள் முயலுங்கள்...விடிவெள்ளி வருமொரு நாளில் காத்திருங்கள் எம்மண்ணில் வாழ்வதற்கு ஒருநாளில்............. --- கௌசிகன் |
நன்றி நமது உறவு: Jeya Pathmanaathan!
|
இங்கு பதிவு செய்யப்படும் அனைத்து ஆக்கங்களுக்கும் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.
உங்களால் பதிவுசெய்யப்படும் கருத்துக்கள் நேரடியாக உரியவர்களுக்குச் சென்றடைய
தொடர்பு ஏற்ப்படுத்தப் பட்டிருக்கின்றது.
உங்களால் பதிவுசெய்யப்படும் கருத்துக்கள் நேரடியாக உரியவர்களுக்குச் சென்றடைய
தொடர்பு ஏற்ப்படுத்தப் பட்டிருக்கின்றது.
|
|