"என் கவிதை!"
நிஜ நிழல் தெரியா அழகுக் கவிதை அவள்!
அந்த அழகுக் கவிதையைத் தேடும் கவிஞன் நான்! அவளின் வில்போன்ற அழகிய இரு விழிகளின் ஒளி என் கவிதைக்கு ஒளி அழகு! அவள் பாதங்களில் தாண்டவமாடும் சலங்கைகளின் ஒலி என் கவிதைக்கு ஒலி அழகு! அவள் முத்துமுத்தாக பூத்திடும் புன்னகை என் கவிதைக்கு உவமை அழகு! சொக்க வைக்கும் அவள் இடுப்பழகு என் கவிதைக்கு உயிரழகு! காற்றினில் சிதறிடுமவளின் கூந்தலின் அழகு என் கவிதைக்கு சிறப்பழகு! என் கவிதையே உன் கவிஞன் பித்தனாகுமுன் நிஜ நிழல்தனை நிஜமாகக் காட்ட வரமாட்டாயோ! ச.சாந்தன்
|
|