"உலக மங்கையர் தினம்"
அனைத்துப் பெண்களுக்கும் எமது வாழ்த்துக்கள்! Happy Women's day! Bonne fête à toute les femmes! காற்றில் ஏறி விண்ணையும் சாடி விடடார்கள் இன்று பெண்கள்- கல்பனா சாவ்லாக்களாக. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று அஞ்சியிருந்த காலம் கப்பலேறிப் போய் விட்டது. கல் உடைப்பதிலிருந்து கற்றுக் கொடுப்பதிலிருந்து சிலை வடிப்பதிலிருந்து சில்லறை வியாபாரம் செய்வதிலிருந்து சுய உதவிக் குழுக்கள் மூலம் தொழில் வல்லுனர்களாகவும்இ சாதனை படைத்து சிகரத்தை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளனர் இன்றைய மகளிர். எழுதுங்கள் இனி உலக ஏடுகளில் – புதியதோர் உலகம் படைக்கப் புறப்பட்டு விட்டனர் எங்கள் மகளிர் என்று. பாடுங்கள் இனி புத்தம் புதியதோர் உலகம் படைக்கப்புறப்பட்டுவிட்டனர் பாவையர் என்று.. நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிந்த காலம் மலையேறிப்போகட்டும்.. எத்துறையிலும் மகளிரின் சாதனைத் தடத்தைப் பார்க்க புறப்படு பெண்ணே புவியசைக்க மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” உலகில் நடைபெறக் கூடிய அனைத்து செயல்களையும் ஆக்குபவளும் பெண்ணே தீயவற்றை அநீதியை அடியோடு அழிப்பவளும் பெண்ணே. அதனால்தான் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற கூற்று இன்று வரை நிலவி வருகிறது. பெண்களின் கல்வி பொருளாதார முன்னேற்றத்திற்கு பெண்களே நாட்டின் கண்கள் என்று போற்றிப்பாடுவோம். காலம்காலமாக கண்ணீருடன் வாழ்ந்து வரும் பெண் இனம் காத்துவரும் கண்ணிய உணர்வால்தான் இந்த மண்ணில் மனிதநேயம் உயிர்த்து இருக்கிறது. மக்கள்தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்களின் முன்னேற்றமேஇ ஒட்டுமொத்த உயர்வுக்கு வழிவகுக்கும். பெண்ணுரிமைக்காக போராடிய போராளிகளை பற்றியும் பெண்கள் போர்க்குணத்துடன் கட்டியமைத்த இயக்கங்கள் பற்றியும் இந்நாளில் நன்றியுடன் நினைத்து சிறப்புசெய்ய வேண்டும்.. கடந்த கால வரலாற்றை அதில் நடந்த தவறுகளை திறந்த மனதோடு இருபாலாறும் கற்று ஆய்ந்து தீர்வை காண வேண்டும் கண்ட பின்பு கடந்த காலத்திலேயே உழல்வது அவசியமில்லை யாரையும் நம்பியதில்லைதன்னையே நம்புகிறாள்! தன்னம்பிக்கை’ இருப்பதால் மதியோடு பெண் இருக்கிறாள்அதனால் தான் மதிப்பெண்ணிலும் முதலிடம் பெற்று மதிப்புப் பெறுகிறாள்! மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களின் முக்கியத்துவத்தை புறக்கணிக்கும் எந்த சமுகம் வளர்ச்சி என்னும் நிலையை அடையாது. அன்பிற்கு அடையாளமாகயும் தெய்வங்களாகவும் தெய்வ தன்மை சூட்டப்பட்டாலும் பெண்சமூகத்தை மிகவும் கீழான நிலையிலேயே இந்திய சமூகம் வைத்திருத்திந்தது என்பது வரலாற்று உண்மை. பெண்களின் பேச்சு சுதந்திரம் என்பது கூட சமூக அமைப்பை பாதிக்காத வரையிலும் அனுமதிக்கப்பட்டது. பெண்ணின் சிந்தனைகளை தீர்மானிக்கும் உரிமையை நீண்ட நாட்களுக்கு இந்த சமூகமே வைத்திருந்தது. அடிமைப்படுத்தப்பட்ட நிலையை பெருமைமிகுந்ததாக பெண்களை நம்ப வைத்ததும் இதன் அடிப்படையிலே. கடந்த நூற்றாண்டு பல மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தியது. கல்வி வாய்ப்புகளும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திய பொருளாதார சுதந்திரமும் பெண்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சவுந்தா பதிவு: 08/03/2013 |
|