"சிந்தனை வரிகள் நமக்கு"
உழைப்பில் வித்தகர்களாக இருந்திடல் வேண்டும் எல்லோரையும் சிரிக்க வைப்பதில் வல்லவராக இருந்திடல் வேண்டும் வார்த்தைப் பிரயோகங்களில் கவனமாய் இருந்திடல் வேண்டும் இழிவுத்தன்மைகளை ஒழித்திடல் வேண்டும் கல்லறைகளை பூசித்துவிடல் வேண்டும் கடமைகளை தவறாமல் செய்திடல் வேண்டும் கண்ணியமாக காரியங்களை நகர்த்திடல் வேண்டும் கடன்களை அடியோடு அழித்திடல் வேண்டும் வீண் பழிச்சொற்களை தவிர்த்திடல் வேண்டும் தான தர்மங்களை செய்வதில் பின்நின்றிடல் வேண்டாம் பாவங்களை செய்வதில் முன்நின்றிடல் வேண்டாம் திருமண காரியங்கள் செய்வதில் கவனமாக இருந்திடல் வேண்டும் கன்னிகளின் மனம் நோகாமல் நடந்திடல் வேண்டும் ஆபத்துக்களில் உதவிட வேண்டும் சோம்பேறிகளாக இருந்திடல் வேண்டாம் சுமைதாங்கிகளாக இருந்திடல் வேண்டும் சுற்றம்புறம் உள்ளவர்களை மதித்திடல் வேண்டும் சுற்றாடல்களை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும் அக்கறையுள்ளவன் போல் நடிப்பவனை நம்பிட வேண்டாம் நம்பிக்கையானவனுடன் கருத்துக்களை பரிமாறிட வேண்டும் விதிதனை நொந்திடல் வேண்டும் மனிதனை நம்பிடல் வேண்டும் சதிதனை வென்றிடல் வேண்டும் பட்டபின்பாவது தெளிந்திடல் வேண்டும் பரதேசியாக நின்றிட வேண்டாம் பாரெங்கும் பட்டினிச் சாவினை தடுத்திட வேண்டும் ஜாதி மத பேதங்களை ஒழித்திடல் வேண்டும் பரம்பரை வீண் கெளரவங்களை மறந்திடல் வேண்டும் ஜனங்களிடையே நற்பெயரினை வளர்த்திட வேண்டும் உயர்வே நமது நாமமாக கொள்ளுதல் வேண்டும் தாழ்வே இல்லையென அடித்துச் சொல்லிட வேண்டும் அவரவர் தொழில்களை நேசித்திடல் வேண்டும் தொழில் ரீதியாக ஜாதிகளை வகுப்பதை தவிர்த்திடல் வேண்டும் ஆணும் பெண்ணுமே ஜாதியென வருங்காலத்தை வளர்த்திட வேண்டும் கடந்தகால சுவடுகளை நினைத்திடல் வேண்டும் எதிர்கால சுமைகளை துல்லியமாக களித்திடல் வேண்டும் மயிலை ச. சாந்தன் பதிவு: 24/03/2013
|
|