எமது முன்னோர்களால் எம்மிடம் தரப்பட்ட எமது சைவசமயக் கொள்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் வரும்காலத்தில் எவ்வித ஐயப்பாடுமின்றி இன்றைய இளம் சந்ததியினர் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை நாம் ஏற்படுத்திக் கொடுப்பது எமது முக்கி கடமையாகும். இவ்விடையத்தில் அண்மைக்காலத்தில் எமது சமய விழாக்கள், கொண்டாட்டங்கள் இரு வேறு வேறு நாட்களில் நடப்பது எமது கடமையை நாம் சரிவரச் செய்கிறோமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
