தைப்பூசத்தன்று சிவன் முப்புரங்களையும் எரித்ததாகக் கூறப்படுகின்றது.
தைப்பூசத் திருநாளன்று பிள்ளைகளுக்கு ஏடுதொடக்குதல், காதுகுத்துதல் போன்ற சுபகாரியங்கள் செய்யப்படுகின்றது. இலங்கையில் தமிழர்கள் தைப்பூசத்தில் அன்று புதிரெடுத்து (அறுவடைக்குத் தயாராகவுள்ள தங்கள் வயல்களிலிருந்து முதலில் சிறிது நெற்கதிர்களை எடுத்தல்) அரிசியாக்கிப் பொங்கி இறைவனுக்குப் படைப்பார்கள்.
வள்ளலார் இராமலிங்க சிவாமிகள் ஒரு தைப்பூசத்தன்று ஒளியானார் எனக் கூறப்படுகின்றது. இதனால் தைப்பூசத்தன்று வள்ளலார் விழாவைக் கொண்டாடுகின்றனர்.