தமிழருக்கும் தைப்பூசத்துக்கும் உள்ள தொடர்பு பல்லாயிரம் ஆண்டுகளாக நீள்கிறது. 2560 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் இலங்கைக்கு வருகிறார். இலங்கைத் தீவில் உள்ள தமிழர் யாவரும் தைப்பூசத் திருவிழாவுக்காகக் கதிர்காமத்திலும் சார்ந்த மகியங்கனைப் பகுதியலும் கூடியிருந்தனர்.
மகாவமிசம் பின்வருமாறு சொல்கிறது.
“..அவர் தாம் புத்த பதவியை அடைந்த ஒன்பதாவது மாதமாகிய தை மாதத்துப் பௌர்ணமி நாள் அந்திப் பொழுதில் இலங்கைத் தீவைத் தெளிவாக்கும் பொருட்டு இலங்கையை அடைந்தனர்.
...... இலங்கையில் மனங்கவரும் அழகிய ஆற்றங்கரையிலே மூன்று யோசனைகள் நீளமும், ஒரு யோசனை அகலமும் கொண்ட மகாநாகவனம் என்ற சோலையுள்ளது.
இலங்கையில் வாழும் இயக்கர்கள் யாவரும் அந்நாளில் அங்கு கூடினர்….” (மகாவமிசம், 1:19-23)
பல்லாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த தைப்பூச விழாவை இலங்கைகக்கு மேற்காக உள்ள திருவோடு காய்க்கும் சீசெல்சுத் திருநாட்டில் 255 ஆண்டுகளாக வாழும் தமிழர் கொண்டாடுவர். 225 ஆண்டுகளாக இல்லாத வழமையாக, கடந்த 30ஆண்டுகளாகத் தைப்பூசம் திருவிழாவுக்குச் சைவர்களுக்கு அரச விடுமுறை.
225 ஆண்டுகளாக வாழ்ந்தாலும் அமைப்புச் சார்ந்த மக்களாகத் திரளாததால் தைப்பூசத்துக்கு விடுமுறை கேட்க முடியவில்லை. 1984 மே மாதம் முதல் நாள் என் தலைமையில் சீசெல்சுத் தலைநகர் விக்ரோறியாவில் நடந்த கூட்டத்தில் சைவர் ஒன்று கூடினர். இந்துக் கோயில் சங்கம் அமைத்தனர். அந்தச் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அரசு கடந்த 30 ஆண்டுகளாகத் தைப்பொங்கல், தீபாவளி, தைப்பூசம் ஆகிய நாள்களுக்குச் சைவர்களுக்கு அரச விடுமுறை.
தைப்பூசத்தன்று கடைத்தெருவை மூடுவர். தெருவெங்கும் காவடியாட்டம். விழாக்கோலம் பூணும் சீசெல்சு நாடு.
சீசெல்சு நாட்டுச் சைவர்களின் மீளெளுச்சிக்கு என்னையும் பங்களிக்குமாறு ஆட்கொண்ட இறைவன் அருள் என்னே என்னே.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

காலச்சுழற்சி சூரியசந்திரரின் நகர்வினால் ஏற்படுகிறது என்பதை அன்றே உணர்ந்தவர்கள் நம்முன்னோர். தைமாதப்பிறப்பு சூரியன் மகரராசியில் மீளவும் நுழையும் நாள் என்று தைத்திருநாள் கண்டனர். பொங்கலிட்டு ஊர்கூடி உண்டு மகிழ்ந்து கலைகள் கண்டு உயிர்கள் பேணி உயர்ந்தனர். சந்திரன் கடகராசியில் நுழையும் நாள் தைமாதத்திற்கு உரிய உச்சபலத்துடன் சந்திரன் திகழும் நாள் என்பதன் அடிப்படையில் அன்று பூசநட்சத்திரமும் வானில் காணப்படுவதால் அன்றைய தினத்தைத் தைப்பூச நன்னாள் என்று கொண்டாடினர். மைப்பூசும் ஓண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான் நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். |
என்று பூம்பாவையை எலும்பிலிருந்து உயிர்பெற்று எழச்செய்வதற்காகத் திருஞானசம்பந்த சுவாமிகள் சீகாமரப் பண்ணில் பூவைப் பாட்டுக்குப் பாடியபொழுது தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வந்த மாதாந்தப் பெருவிழாக்களைப் பாடி அவற்றைக் காணாதே போதியோ பூம்பாவாய் எனப் பூம்பாவையை உயிர்பெற்றெழ அழைத்தார். அந்த வகையில் தைமாததிற்கான பெருவிழாவாகத் தைப்பூசமே தமிழ்ஞானசம்பந்தரால் குறிக்கப்ட்டுள்ளது தைப் பூசத்தின் பெருமைக்கும் முக்கியத்துவத்திற்கும் சிறந்த உதாரணமாகிறது. தைப்பொங்கல், மகாசிவராத்திரி போன்ற இன்று நாம் கொண்டாடும் பெருவிழாக்களைவிட தைப்பூசம் தொன்மையானது என்பதற்கு அவற்றின் பதிவுகள் இல்லாது தைப்பூசத்தின் பதிவு பூம்பாவைப் பாட்டில் உள்ளமை சான்றாகிறது. மைபூசிய சுடர்ஒளி போன்று பிரகாசிக்கும் கண்களை உடைய பெண்களின் முகத்தில் மடமை என்னும் அறிந்தும் அறியாததுபோல் பாவனை செய்யும் பண்பு மிளிர, மயிலையில் அவர்கள் தம்கையினால் பூசும் திருநீற்றுக்குரியவராக கபாலீச்சுரர் அமர்ந்துள்ளார். இங்கு தைப்பூசப் பெருவிழாவன்று அவன் மேல் அன்ன அபிஷேகம் செய்யப்பட்டு நெய்யால் மறைக்கப்பட்டு நெய்ச்சோற்று மலையாகவே அன்னம் குவிந்து கிடக்கும். பசிப்பிணியும் மலப்பிணியும் நீக்கும் இத்தகைய சிறப்புமிகு தைப்பூசத் திருநாளைக் காணாது உயிர்பிரிந்து போவாயா பூம்பாவை என்பது தமிழ்விரகன் தந்த அற்புதமான பூம்பாவைப்பாட்டு. இந்தப் பாட்டின் வழி தமிழர் பெருவிழாக்களில் ஒன்று தைப்பூசம் என்பது தெட்டத் தெளிவாகிறது.
சைவத்தில் சிவனின் அம்சமாகச் சூரியனையும் சக்தியின் அம்சமாகச் சந்திரனையும் கருதி இறைவனையும் இறைவியையும் போற்றும் மரபு உண்டு. அந்த வகையில் தைமாதப் பிறப்புக்கு முன்னர் மார்கழித் திருவாதிரை நன்னாளில் சிவன் ஆனந்தத்தாண்டவம் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஆருத்திரா தரிசனம் கண்டவர் தமிழர். பின்னர் தைப் பூசத்தன்று சந்திரன் சக்தியின் அம்சம் என்ற வகையில் அன்று சக்தி மகிழச் சிவனும் சக்தியும் இணைந்து தாண்டவமாடினர் என்ற நம்பிக்கை பிறந்தது. பதஞ்சலி முனிவர் நடராச தரிசனத்தைத் தைப்பூசத்தில் தான் கண்டார் என்கிற நம்பிக்கையும் உள்ளது. சிதம்பரத்திற்குத் திருப்பணிகள் பல புரிந்த பல்லவ மன்னன் இரணியவர்மன் தைப்பூசத்தன்று நடராச தரிசனம் கிடைக்கப் பெற்றான் என்கிற மரபும் உள்ளது. இதனால் தைப்பூசத்தன்று சிவன்கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறும். அது மட்டுமல்ல சிவனின் அதோமுகம் கருணைமுகம் என்று சொல்லப்படும் ஆறுமுகக்கடவுளுக்கு சக்தி வேல் கொடுத்த தினமாகவும் முருகவழிபாட்டில் தைப் பூசத்திற்கு விளக்கம் கொண்டனர் தமிழர். இதனால் தைப்பூசத்தன்று தீமை அழிந்திட தர்மம் நிலைத்திடச் சூரனை வதம் செய்ய வீரவேலினை சக்தி தன் ஆற்றல் எல்லாவற்றையும் குவித்த ஆயுதமாகப் பிள்ளையின் கரத்தில் கொடுத்தாள் என்கிற மரபு தோன்றியது. இதனால் தைப்பூசம் சக்திக்குரிய சிறப்புப் பெருவிழாவாகவும் உள்ளது. இதனால் அன்றையதினம் முருகனடியார்கள் காவடி எடுத்தும், பெண்கள் பாற்குடம் சுமந்தும் முருகனின் தைப்பூசத் திருநாளாகத் தைப்பூசத்தைப் பெருவிழாவாக்கினர். அதிலும் சிறப்பாகத் தண்டாயுதபாணியாகப் பழனியில் வந்தமர் திருமுருகனின் சந்நிதியில் தைப்பூசத் திருவிழா, பக்தர்கள் காவடிகள் சுமந்துவரப் பெண்கள் பாற்குடங்கள் சுமந்துவர நேர்த்தி வைத்தவர்கள் தலைக்கு மொட்டையடித்துச் சந்தனம் பூசி மலைகள் ஏறிவர நாத இசையும் திருப்புகழும் தீந்தமிழில் பக்தர் முருகனை அழையொலியும் சேர்ந்து ஓசையும் ஒளியுமாக உள்ள இறைவனையே அவ்விடத்தில் மனதால் காணவைக்கும் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
பக்தர்கள் கொண்டாடும் பழனியில் அருணகிரிநாதருக்குத் திருக்காட்சி நல்கிய முருகன் செபமாலை அளித்தான் என்பது தலப் பெருமைகளில் ஒன்றாக உள்ளது. உலகைக் காக்க வேலும் உயிரைக்காக்க செபமாலையும் வழங்கப்பெற்ற அருட்தலமாக இலங்கு பழனியில் பெரியநாயகி அம்மன் கோவிலில் தான் தைப்பூசத் திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டு இக்கோயிலின் வீதிகளிலேயே தைப்பூசத்தன்று தேரோட்டமும் நடைபெறுகிறது.
மேலும் தைப்பூசத்தன்று ஐம்பூதங்களில் முதலாவதாக நீர் தோற்றுவிக்கப்பட்டது என்றும் அதனால் இதுவே உலகம் உண்டான முதல்தினம் என்றும் கருதும் வழக்கமும் தமிழரிடை உள்ளது. அதனால் தைப்பூசம் இயற்கையின் வழி இறைவன் நாம் வாழும் உலகைச் சக்தியைக் கொண்டு தோற்றுவித்த நாளாகவும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் தைப்பூசம் என்பதினால் குருவருள் பெற்று இந்நாளில் எழுத்துத் தொடங்குதல் முதல் முதன்முதல் தொழில்கள் செய்யத் தொடங்குதல் தமிழர் மரபாகத் தொடர்கிறது. நவராத்திரியில் சரஸ்வதி அருள் பெற்று விஜயதசமியில் எழுத்துத் தொடங்குவது போல் சக்திக்கும் தமிழ்க்கடவுளாம் முருகனுக்கும் சிவனுக்கும் உரிய தைப்பூசத்தில் எழுத்துத் தொடங்குவது திருவருள் பெருக்குக்கு உதவும் என்பது நம்முன்னோர் நம்பிக்கை.
இராமலிங்க வள்ளலார் வெள்ளிக்கிழமையில் வந்த தைமாத புனர்பூச நட்சத்திரத்தன்று தான் சமாதியானார் என்பதை நினைந்து தைப்பூசத் தினத்தன்று வடலூரில் தைப்பூசத்தினத்தன்று வள்ளலார் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாறு தமிழர் வாழ்வியலின் முக்கிய தினமான இன்று இலண்டன் வாழ் தமிழ் மக்களும் பக்திச்சிரத்தையுடன் சிவசக்தியையும் பழனிக்கந்தனையும் போற்றி வழிபட்டு அகத்திலும் புறத்திலும் அமைதி வாழ்வு காண எல்லாம் வல்ல இறைவனடி இறைஞ்சிடுவோம்.
- சூ. யோ. பற்றிமாகரன் BA, Special Diploma (Oxford), BSc, P.G. Diploma, MA (Politics) MA (Tamil)

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.