ஆலய வழிபாடு
“ கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் “
“ ஆலயம் தொழுவது சாலவும் நன்று ”
கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, முருகப்பெருமானை நேரில் தரிசித்த, கலைவாணிக்கு நிகரானவர் எனப் போற்றப்படும் மூதாட்டி ஔவையார் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஆலயம் என்பது ஆன்மா இறைவனில் லயிக்கின்ற இடம். ஆன்மாவின் ஆணவ மலம் அடங்குவதற்குரிய இடம் எனவும் கூறலாம்.

கோயில் என்பதன் பொருள் (கோ – அரசன், இல் – வீடு) அரசனுடைய வீடு என்பதாகும். தெய்வங்களுக்கு அரசனாக விளங்கும் சிவபெருமானின் ஆலயமே திருக்கோயில். நாளடைவில் பிள்ளையார், முருகன், அம்பிகை என மற்றத் தெய்வங்களின் அமைவிடமும் கோயில் என அழைக்கப்படலாயிற்று.
நாம் ஏன் கோயிலுக்குச் செல்லவேண்டும்? வீட்டில் கும்பிடமுடியாதா ?
நாம் முற்பிறவிகளில்ச் செய்த வினையின் ஒருபகுதியை அனுபவிப்பதற்கே இறைவன் திருவருளால் இப்பிறவியை எடுத்துள்ளோம். இவ்வினையை இலகுவாகக் கடந்து செல்வதற்கு நாம் இறைவனை நாடவேண்டும். ஆற்றைக் கடக்க ஓடத்தைப் பாவிப்பது போலவும், தண்ணீர்க் குடத்தைத் தலையில்ச் சுமக்கும் போது தலைக்கும் குடத்திற்கும் இடையில் சும்மாடு (துணியால் வட்டமாகச் சுற்றப்பட்ட திருகணி) வைத்துப் பாரத்தைச் சுலபமாக்குவது போலவும் இறைவன் அருளினால் எமது வினைகளை நாம் இலகுவாகக் கடந்து செல்லலாம். அது மட்டுமல்ல இப்பிறவியில் மேலும் தீய வினைகளைச் செய்யாமல் நல் வினைகளைச் செய்வதற்கு எம்மை நாமே பக்குவப்படுத்துவதற்கு இறைஅருளை வேண்டுவதற்கும் நாம் இறைவனை நாடவேண்டும். சுருக்கமாக நாம் இறைவனை நாடுவது எமது தேவைகளை வரமாகக் கேட்டுப்பெறுவதற்கும், எமக்கு ஏற்படும் பயத்தை களைய இறைவனிடம் வேண்டுவதற்குமாகும்.
வீட்டில் பூஜை அறை அமைத்து நாம் செய்யும் பூஜை ஆத்மார்த்தப் பூஜை ஆகும் ஆலயத்தில் பொதுவாக (எங்களுக்காக) சிவாச்சாரியார் செய்யும் பூஜை பரார்த்த பூஜை (பர – மற்றவர், அர்த்த – பொருட்டு) ஆகும்.மூங்கில்க் காட்டில் உள்ள மூங்கில் முழுவதிலும் தீயை உருவாக்கும் தன்மை இருப்பினும் உராயும் இடத்தில் மட்டும் தீ உருவாகுவதைப்போல இறைவன் எங்கும் நிறைந்திருப்பவராயினும் இறை அருள் வெளிப்படும் இடம் ஆலயம் ஆகும். ஆகம முறைப்படி அமையும் ஆலய அமைப்பும், ஆலயம் அமைக்கும் போது அங்கு பிரதிஸ்டை செய்யப்படும் விக்கிரகங்களும், அவற்றின் கீழ் வைக்கப்படும் இயந்திரமும், அப்பொழுது செய்யப்படும் கிரியைகளும் (கும்பாபிஷேகம்) எங்கும் பரந்துள்ள இறைசக்தியை அங்கு குவியச் செய்கின்றன. அதுமட்டுமல்ல ஆலயத்தில்த் தினமும் நடக்கும் மந்திர உச்சாடனத்தாலும், அபிசேக ஆராதனைகளாலும், அருச்சனை முதலிய கிரியைகளாலும், திருமுறைப் பாடல்களாலும், மகோற்சவம், விசேடகால உற்சவங்களாலும் அன்னதானம் போன்ற நற்காரியங்கள் நடப்பதாலும் இறைஅருள் தொடர்ந்து சுரக்கும் இடமாக ஆலயம் திகழ்கின்றது. ஆலயங்கள் இறைவழிபாடு மட்டுமின்றி எமது மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கும் இடமாகவும் மிளிர்கின்றன. ஆலயத்திலுள்ள விக்கிரகங்கள் எப்பொழுதும் எமது தேவையைப் பூர்த்தி செய்யத் தயாராக இருப்பதைக் குறிக்க வரதகரத்துடனும், பயத்தை நீக்க அபயகரத்துடனும் தரிசனம் தருகின்றன.
ஆலயத்தில் ஒலிக்கின்ற மந்திர ஒலிகளும், திருமுறைப்பாடல்களும், மணிஓசை, நாதஸ்வரம், மேளம் முதலிய மங்கல வாத்தியங்களின் ஒலிகளும், சாம்பிராணி வாசனை என்பனவும் எமக்குப் பக்தி உணர்வினை எழுப்புகின்றன. இச்சூழ்நிலை எமது ஐம்புலன்களை அடக்கி மனதை ஒருநிலைப்படுத்தி இறைவழிபாட்டிற்கு உகந்ததாக உள்ளது. முறையான ஆலய தரிசனம் , தொழுகை தெளிவான ஞானத்தை நிச்சயம் ஊட்டும்.
உருவ வழிபாடு ஏன் ? , பல விக்கிரக வழிபாடு ஏன் ?
வழிபாட்டில் இரண்டு விதம் உண்டு. ஒன்று அருவ வழிபாடு மற்றது உருவ வழிபாடு. உருவ வழிபாடே பெரும்பான்மையான எளிய மக்களுக்கு ஏற்ற முறை. ஏனெனில் உருவங்களைப் பார்த்தே பழகிப்போன நாம் உருவமில்லாமல் ஒன்றைச் சிந்தித்தல் சற்று கடினமானதாகும். முற்காலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த நாம் தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எனப் பல உறவினர்களுடன் உறவாடி, எங்களுக்குப் பிடித்தவர்களிடம் தேவையானவற்றைப் பெற்று வாழப் பழகியுள்ளோம். இறைவனிடமும் இதே வழியைப் பின் பற்றிப் பிடித்த தெய்வங்களை வணங்கி எமக்குத் தேவையானவற்றைப் பெறுவது சுலபமான காரியமாகும்.
ஆலயத்துக்குச் செல்வது எப்படி ?
நாம் ஆலயத்திற்குச் செல்லும் போது அகத்தூய்மையுடனும், புறத்தூய்மையுடனும் செல்லவேண்டும். அகத்தூய்மைக்கு வாய்மையே வழி. இறையாற்றலின்பால் எமக்கு உள்ள நம்பிக்கையும், அறம் தவறின் தெய்வம் எமது வேண்டுதலை நிறைவேற்றாது என்ற அற உணர்வோடும் நாம் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். புறத்தூய்மையானது வெளிச் சுத்தம் அதாவது குளித்து, தோய்த்து உலர்ந்த ஆடையை உடுத்தி வீட்டிலிருந்து இடையில் எங்கும் செல்லாமல் நேராக ஆலயத்திற்குச் செல்லவேண்டும். இறைவன் இருக்கும் அதி உன்னதமான இடமாகிய ஆலயத்தையும் நாம் சுத்தமாகப் பேணவேண்டும்.
ஆலயத்தினுள் செய்யக்கூடாதவை எவை ?
1.கோயிலில் மூலவருக்கு நேர் எதிராக நின்று கும்பிடக்கூடாது. கருவறையில் சுவாமியின் இருபுறமும் நின்றுதான் வணங்கவேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. சுவாமிக்கு எதிரே நிற்பவர் எதிரி எனக் காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார். அன்னையின் கடைக்கண் பார்வை பட்டால் செல்வம், கல்வி, ஒருநாளும் தளர்வறியா மனம், தெய்வ வடிவம், வஞ்சமில்லா நண்பர்கள், நல்லன எல்லாம் கிடைக்கும் என அபிராமிப்பட்டர் கூறியுள்ளார். (மூலவருக்கு முன்பு நிற்கும்போது மற்ற அடியார்கள் மூலவரைத்தரிசிக்கவிடாமல்த் தடுக்கும் பாவத்தை நாம் செய்கின்றோம்)
2.கோயிலுக்குள் இறைநாமத்தைத் தவிர பிற வார்த்தைகள் பேசக்கூடாது. (வேண்டத்தகாத வார்த்தைகளை நாம் பேசும் போது மற்ற அடியவர்களின் அமைதியான பிரார்த்தனைக்கு நாம் இடையூறாக இருக்கின்றோம்)
3. கோயிலுக்குள் கவர்ச்சியான ஆடை அணிகலன்களை அணியக்கூடாது. (எமது கவரச்சி மற்ற அடியவர்களின் புலனடக்கத்தைப் பாதிக்கும்)
4. கோயிலுக்குள் பெண்கள் தலைவிரி கோலமாகச் செல்லக்கூடாது. (விரித்த கூந்தலை துக்கநிகழ்ச்சியாகவும், அபசகுனமாகவும் பார்ப்பது எமது மரபு. கோயிலுக்குள் இது மற்ற அடியவர்க்கு இடையூறாக இருப்பதுமட்டுமல்ல அங்கு ஏற்றப்பட்டிருக்கும் தீபங்களிலிருந்து கூந்தலில்த் தீ பிடிக்கும் அபாயமும் உள்ளது.)
5. ஆலயத்தில் வழங்கப்படும் பிரசாதத்தை வீணாக்காமல் அளவோடு எடுத்து நிலத்தில்ச் சிந்தாமல் உண்ண வேண்டும். (நிலத்தில்ச் சிந்தும் பிரசாதத்தால் மற்ற அடியவர்களின் பாதங்கள் மட்டுமல்ல ஆலய துப்பரவும் பாதிக்கப்படுகிறது. பிரசாத்த்தை வீணாக்குவதால் மற்றடியார்களுக்கு பிரசாதம் இல்லாமல்ப்போகிறது.

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.