ஒற்றுமை
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு , ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு”, ஒற்றுமை இல்லை எனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும். இதை இன்று நாம் எமது அன்றாட வாழ்வில் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இன்று மனிதர்கள் மதத்தால், மொழியால், இனத்தால், நிறத்தால், அரசியலால், பிளவுபட்டுத் தங்களுக்குள் மனம் குறுகி ஒருவரை ஒருவர் பகைத்தும், சண்டையிட்டும் கொள்கின்றனர். இவ்விடையம் கணவன், மனைவி உட்பட குடும்ப உறவுகளுக்குள்ளும், ஊருக்குள்ளும், ஊர்களுக்கிடையிலும், நாட்டுக்குள்ளும், நாடுகளுக்கிடையிலும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதைத் தவிர்க்குமாறுதான் எமது முன்னோர்கள் மேற்படி பழமொழியை மட்டுமல்லாமல் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”, “ஒருகை தட்டினால் ஓசை வராது” , “இரண்டுகை தட்டினால்த்தான் ஓசை வரும்”, “தனிமரம் தோப்பாகாது”, “நீரடித்து நீர் விலகுமா” போன்ற பழமொழிகளையும் எங்களுக்குச் சொல்லிச் சென்றுள்ளனர்.

“ஊர் கூடினால்த்தான் தேரை இழுக்கலாம்”, “ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்னும் பழமொழிகள் மூலம் ஒற்றுமையால் வரும் நன்மையையும் ஒற்றுமையின்மையால் வரும் தீமையையும் எடுத்துக் கூறியுள்ளனர். இவ்விடையம் மக்களிடம் போய்ச் சேர்வதற்காக கிருஸ்ணபரமாத்மா அமுதத்தையும், தேவர்களையும், அசுரர்களையும் வைத்து நடத்திய புராணக்கதையை போன்று பல கதைகளைக் கூறி வைத்தனர். அது மட்டுமல்லாமல் சிறுவயதிலேயே பாடசாலையில் பாடப்புத்தகத்தில் புறாக்களுக்கு வலை விரித்த வேடனின் கதையை எமக்கு கற்பித்தார்கள். இவற்றை எல்லாம் உதாசீனம் செய்ததின் பலனை நாம் இப்பொழுது அனுபவிக்கின்றோம். மேற்கூறிய பழமொழிகளை விளங்கப்படுத்துவதையும், கதைகளை முழுமையாகக் கூறுவதையும் , தலைப்பைப் பற்றி உதாரணங்களுடன் விரிவாகக் கூறுவதையும் தவிர்த்து எதனால் ஒற்றுமை இன்மை ஏற்படுகிறது, ஒற்றுமை ஏற்படுவதற்கு என்ன வழி என்பதை மட்டும் கூற விரும்புகின்றேன்.
முதலாவதாக ஏன் ஒற்றுமை இன்மை ஏற்படுகின்றது என்ற கேள்விக்கு எம்மிடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல்ப் போய்விட்டது என்பதுதான் முக்கிய காரணமாகும். பொதுவாக ஒருவர் அவர் இருக்கும் ஸ்தானத்தையும், அவரின் அனுபவத்தையும், சந்தர்ப்ப சூழ் நிலைக்கேற்பச் சரியானது என நினைத்து எடுக்கும் முடிவு மற்றவருக்கு அவர் இருக்கும் ஸ்தானம், அவரின் அனுபவம், சந்தர்ப்ப சூழ் நிலைக்குப் பிழையாகத் தோன்றலாம். இதில் யாருடைய முடிவு சரியானது என விவாதிப்பதாலும் இருவருமே தான் கூறுவதுதான் சரி, மற்றவர் கூறுவது பிழை என்னும் மனோநிலையிலேயே இருப்பதாலும் ஒற்றுமை இன்மை ஏற்படுகின்றது.
ஒற்றுமை ஏற்படுவதற்கு வழியை ஆராய்வோமானால் குடும்பங்களை எடுத்துக் கொண்டால் குடும்பத் தலைவனோ அல்லது குடும்பத்தில் உள்ள பெரியவரோ அவரின் அனுபவத்தைக் கொண்டு எடுக்கும் முடிவுகளுக்கு மற்றவர்கள் கருத்து வேறுபாடு இருந்தாலும் விட்டுக் கொடுத்து அவருக்கு ஆதரவாகச் செயல்ப்பட்டால் குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும். அல்லது வீட்டினுள் நடைபெறும் சில விடையங்களை வீட்டுத் தலைவியும் மறு விடையங்களை வீட்டுத் தலைவனும் பகிர்ந்து கொள்ளலாம். தொடர்ந்து எடுக்கும் முடிவுகளால் பிரச்சனைகள் ஏற்பட்டால் முடிவெடுப்பவர் அவராக உணர்ந்து முடிவெடுக்கும் பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைக்கலாம். யார் முடிவெடுத்தாலும் மற்றவர்களின் அபிப்பிராயத்தையும் கேட்ட பின்பு முடிவெடுப்பது நல்ல பலனைத் தரும். எடுக்கும் முடிவில் உடன்பாடு இல்லாவிட்டாலும் எடுக்கும் முடிவை குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏற்றுச் செயல் படுத்தினால் வாழ்க்கை உன்னதமாக அமையும்.
பொது ஸ்தாபனங்களை எடுத்துக் கொண்டால் ஸ்தாபனத்தில் தொண்டாற்றுபவர்கள் பதவி ஆசை அற்றவர்களாக, சுய நலத்தை விட்டுப் பொது நலத்துடன் ஸ்தாபனத்தின் நோக்கமே குறிக்கோளாக “யார் குற்றினாலும் அரிசி ஆகவேண்டும்” என்னும் பழமொழிக்கேற்ப செயலாற்றவேண்டும். அதாவது உறவினர், நண்பர், தெரிந்தவர்கள், பதவி, அந்தஸ்த்து, பணமுள்ளவர், பணமற்றவர் என பேதம் பாராமல் எல்லோரையும் சம்மாகப் பாவித்து ஸ்தாபனத்தின் முன்னேற்றத்திற்காக அதன் யாப்புக்கமையச் செயலாற்ற வேண்டும். ஸ்தாபனத்தை நடாத்தும் தலைவர், அல்லது செயலாளர் அல்லது செயற்குழு எடுக்கும் முடிவை எல்லோரும் ஏற்று நடந்தால் ஸ்தாபனம் அதன் நோக்கங்களை இலகுவாக நிறைவேற்ற முடியும். இங்கும் நான் திரும்பவும் கூறுவது யாதெனில் நான் நினைப்பதுதான் சரி மற்றவர் நினைப்பது தவறு என்னும் மனோநிலையை விடுத்து ஜனநாயக முறைப்படி செயற்குழுவில் உள்ள பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளும் விடையத்தை அதை ஏற்றுக் கொள்ளாதவர்களும் ஆதரித்துச் செயலாற்றினால் ஸ்தாபனத்தின் செயற்பாடுகள் வெற்றியாக அமையும். அப்படி அமையாவிட்டால் பதவியில் உள்ளவர்கள் தாங்களாக முன்வந்து தாங்கள் வகிக்கும் பதவியிலிருந்து விலகி மற்றவர்கள் ஸ்தாபனத்தைக் கொண்டு நடத்த உதவி புரிய வேண்டும். அவ்வாறு நடைபெறாவிடில் அபிப்பிராய பேதம் உள்ளவர்கள் பொறுத்திருந்து ஸ்தாபனத்தின் யாப்பிற்கு அமைய பொதுக் கூட்டத்தில் அல்லது தேர்தலில் புதிய நிர்வாகத்தை ஜனநாயக முறைப்படி தெரிவு செய்து நிர்வாகத்தைக் கொண்டு செல்லலாம்.
மேற்படி விடையத்தை ஆன்மீக ரீதியில் அணுகுவோமானால் “அன்பே சிவம்” அதாவது அன்பே இறைவன் எனவும், எல்லோர் உள்ளத்திலும் இறைவன் இருக்கின்றான் எனவும் திருமந்திரத்தில் வரும் திருமூலநாயனாரின் கூற்றை மனதில் இருத்தி, தூய்மையான மனதுடன் வாழ்வோமானால் வாழ்க்கை சுபீட்சமாக அமையும். இதேகருத்தை பாரதியாரின் “உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது” என்னும் பாடல் வரிகள் தூய்மையான உள்ளத்தையே இறைவன் எம்மிடம் எதிர்பார்க்கிறார் என்பதை வலியுறுத்துகின்றது. இதை விடுத்து “நான்”, “எனது” என எண்ண முற்பட்டால் ஆணவம் தலை தூக்கி அழிவை ஏற்படுத்தும்.
இறுதியாக மனித சமுதாயத்தில் குறையில்லாதவர்கள் யாரும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு “ஐந்து விரல்களும் சமமாக இல்லாமல் இருந்தும்” எவ்வாறு ஒன்றாகச் செயல்படுகின்றதோ, எவ்வாறு நாம் அவற்றைப் பயன்படுத்துகின்றோமோ, எவ்வாறு அவற்றை எம்முடன் வைத்திருக்கின்றோமோ அவ்வாறு நாமும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து, மற்றவர்கள் செய்யும் தவறை மன்னித்து, சம்பந்தப்பட்டவர்களுடன் மனம் விட்டுப் பேசி, ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தி, எல்லொரும் ஒற்றுமையாகச் செயலாற்றினால் மானிடராய்ப் பிறக்கக் கிடைத்த இந்த அரிய வாழ்க்கையை நாம் மகிழ்வுடனும், நிம்மதியாகவும் வாழலாம்.

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.