இன்று சிதம்பரம் கும்பாபிசேகம். உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இறைவனின் இன்னருள் பெருகும் நன்னாள். உமாபதி சிவாச்சாரியார் தினத்தில் இடம்பெறுவது திருவருள் பெருக்கை மேலும் கூட்டுகிறது. உலகெலாம் அமைதியும் அன்பும் திருவருளும் நிறைந்திட இந்நன்னாளில் அவனருளாலே அவன் தாள் பணிகின்றேன்.
இத்துடன் இதயத்து எழுந்த திருக்கூத்து குறித்த சில எண்ணங்களை எழுத்தாக அல்ல உணர்வாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள அக்கோப்பை இணைத்துள்ளேன்.