சைவ சித்தாந்தம் – ( பகுதி – 32 )
(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 7. சிவப்பிரகாசம்
சிவப்பிரகாசம். கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தில்லை வாழ் அந்தணர்களின் பரம்பரையில் (தில்லை நடராஜருக்குப் பூசை செய்பவர்) வந்தவரும், புறச்சந்தான குரவரில் (4 நான்காவது) ஒருவரும், சித்தாந்த சாத்திரங்கள் 14 இல் சித்தாந்த அட்டகம் என்று போற்றப்படும் 8 நூல்களை அருளியவரும், புறச்சந்தான குரவரில் ஒருவரான (3 ஆவது) மறை ஞான சம்பந்தரின் மாணவருமான கொற்றவன் குடி உமாபதி தேவ நாயனார் (உமாபதி சிவாச்சாரியார்) அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். தில்லை மூவாயிரவருள் இவர் ஒருவரே சித்தாந்த ஞானத்தை உலகோர்க்கு விளக்கியவர் ஆவார். இந்நூல் சிவஞானபோதத்தின் சார்பு நூலாகவும், சிவஞானசித்தியாரின் வழி நூலாகவும் காணப்படுகின்றது. இந்நூல் முதல் 50 உம் பொது அதிகாரமாகவும், பின் 50 உம் உண்மையதிகாரமாகவும் கொண்ட 100 விருத்தப்பாடல்களைக் கொண்டு முப்பொருளைப் பற்றிச் சுருக்கமாக விளக்குகிறது. பொது அதிகாரத்தில் பாயிரப் பாடல்கள், பதி இலக்கணம், பசு இலக்கணம், பாச இலக்கணம், அவத்தை இலக்கணம் பற்றியும், உண்மை அதிகாரத்தில் ஆன்ம இலக்கணம், ஐந்து அவத்தை இலக்கணம், ஆன்மா உணரும் தன்மை, ஞான வாய்மை, ஞானத்தால் வரும் பயன், புனிதன் நாமம், அணைந்தோர் தன்மை பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்நூலில் வரும் சில பாடல்களைப் பார்ப்போம்.

பாடல் எண் 7.
“புறச்சமயத் தவர்க்குஇருளாய் அகச்சமயத்து ஒளியாய்ப்
புகலளவைக்கு அளவாகிப் பொற்பணிபோல் அபேதப்
பிறப்பிலதாய் இருள்வெளிபோல் பேதமுஞ்சொற் பொருள்போல்
பேதாபே தமும்இன்றிப் பெருநூல் சொன்ன
அறத்திறனால் விளைவதாய் உடல்உயிர்க்கண் அருக்கன்
அறவொளிபோல் பிறிவருமத் துவித மாகுஞ்
சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ
சித்தாந்த் திறனிங்கு தெரிக்கல் உற்றாம்.”
இப்பாடலின் பொருள், புறச்சமயத்தாரால் அறியப்படாததாய், அகச்சமயத்தாரால் அறியப்படுவதாய், கூறப்பட்ட காட்சி முதலிய பிரமாணங்களால் (அளவைகளால்) அறியப்படுவதாய், தங்கம் பல ஆபரணங்களாய் இருக்கும் தன்மைபோலப் பிரம்மாகிய இறைவனும் பல ஆன்மாக்களாய்த் தோன்றி நிற்கும் என்னும் அபேத வாதிகளின் கொள்கை இல்லாததாய், இருளும் ஒளியும் போல முதல்வனும் ஆன்மாக்களும் வேறாய் இருக்கும் என்னும் பேதவாதிகளின் கொள்கை இல்லாததாய், சொல்லும் பொருளும் போலப் பேதமும் அபேதமுமாய் இருக்கும் என்னும் பேதா பேதவாதிகளின் கொள்கையும் இல்லாததாய், சிறப்பு நூலாகிய ஆகமங்கள் சொன்ன சரியை, கிரியை, யோகங்களைக் கடைப்பிடிப்பதால் – உடலும் உயிரும் போல கலப்பால் ஒன்றாகியும், ஆன்ம போதமும் கண் ஒளியும் போல உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாகியும், நிற்கின்றதைப் போன்று பிரித்தற்கு இயலாத அத்துவிதமாகும் சிறப்பினை உடையதாயும் உள்ள வேதாந்தத்தைத் தெளித்து உரைப்பது சைவ சித்தாந்தமாகும். அதன் உண்மையை இந்நூலில் விளங்கச் சொல்லுவோம்.
பாடல் எண் 13.
பலகலையா கமவேதம் யாவையினும் கருத்துப்
பதிபசுபா சம்தெரித்தல் பதிபரமே யதுதான்
நிலவும்அரு உருவின்றி குணம்குறிகள் இன்றி
நின்மலமாய் ஏகமாய் நித்தம் ஆகி
அலகிலுயிர்க்கு உணர்வாகி அசலம் ஆகி
அகண்டிதமாய் ஆனந்த உருவாய் அன்றிச்
செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த்
திகழ்வதுதற் சிவம்என்பர் தெளிந்து ளோரே.”
இறைவனின் சொரூப இலக்கணத்தைக் கூறும் இப்பாடலின் பொருள், வேதம் ஆகமம் அவற்றின் வழிநூல் சார்புநூல் ஆகிய எல்லா நூல்களின் கருத்து பதி, பசு, பாசம் என்னும் முப்பொருளின் இயல்பைத் தெரிவித்தல் ஆகும். அவற்றுள் பதி என்னும் இறைவன் ஏனைய இரண்டிற்கும் மேலானதாகும். இறைவன் அருவமும் உருவமும் அல்லாதாய், குணமும் குறிகளும் இல்லாததாய், மலத்தில் பொருந்தாததாய் ஏகமாய், அழிவில்லாததாய், அளவற்ற உயிர்களின் அறிவுக்கு அறிவாய், சலனம் அற்றதாய், கண்டிக்கப்படாததாய், ஆனந்தமே வடிவாய், சென்றடைய அரிதாய், வழிபட்டவர்கள் சென்றடையும் முத்தியாய், அணுவிற்கு அணுவாய், எல்லாவற்றிற்கும் பெரிதாய் விளங்குவதாம். அவ்விறைவனை அறிவால் தெளிந்தோர் சிவம் என்று சொல்வர்.
பாடல் எண் 14.
“நீடுபரா சக்திநிகழ் இச்சா ஞானம்
நிறைகிரியை தரஅதனை நிமலன் மேவி
நாடறிய கருணைத்திரு உருவ மாகி
நவின்றுபல கலைநாத விந்து ஆதி
கூடும்ஒளி வளர்குடிலை மாயை மேவிக்
கொடுவினைகொள் தநுகரண புவன போகம்
பீடுபெற நிறுவிஅவை ஒடுக்கும் மேனி
பிறங்கியநிட் களசகளப் பெற்றி யாமே.”
இறைவனின் தடத்த இலக்கணத்தைக் கூறும் இப்பாடலின் பொருள், நிலைபெற்ற சிவசக்தி ஆனவள் இச்சாசக்தி, ஞானாசக்தி, கிரியாசக்திகளைத் தர, அந்தச் சக்திகளை மலமற்றவனாகிய சிவன் பொருந்தி – அச்சக்தியாகிய திருவருளே திருமேனியாகக் கொண்டு, நாதம், விந்து, தத்துவங்கள் கூடுகின்ற ஒளி பொருந்திய சுத்த மாயையைப் பொருந்தி – வேதம், ஆகமம் முதலிய பல கலைகளையும் அருளிச் செய்து, அசுத்தமாயை, பிரகிருதி மாயைகளில் கொடிய வினைகளைக் கொண்டிருக்கின்ற தனு, கரண, புவன, போகங்களைப் படைத்து, காத்து, அவற்றைத் தோன்றிய முறையிலேயே ஒடுக்கி, நிட்களம், நிட்கள சகளம், சகளம் என்னும் தன்மைகளை உடையதாய் விளங்குவான் இறைவன்.
பாடல் எண் 92.
“ஆசுறு திரோத மேவாது அகலுமா சிவமுன் னாக
ஓசைகொள் அதனில் நம்மேல் ஒழித்தருள் ஓங்கும் மீள
வாசியை அருளும் மாயா மற்றது பற்றா உற்றங்கு
ஈசனில் ஏக மாகும் இதுதிரு எழுத்தின் ஈடே.”
திரு ஐந்தெழுத்தின் மகிமையைக் கூறும் இப்பாடலின் பொருள், ஆணவ மலமும் திரோதாயியும் பொருந்தாமல் நீங்கும்படி சிவாயநம என்னும் சூட்சும ஐந்தெழுத்தை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரித்தால் ந கரமாகிய திரோதான சத்தியும், ம காரமாகிய மலமும் ஒழிந்து அருட்சக்தியாய் விளங்கும். பின்பு ம கரமாகிய அந்த அருட்சக்தியே சி கரமாகிய சிவத்தைத் தரும். மேலும் அந்த அருளைப் பற்றுக்கோடாகக் கொண்டு ஆன்மா அருளிலே அடங்கி சிவத்திலே ஒன்றுபடும். இதுவே ஐந்தெழுத்தின் பெருமையாகும்.
சூட்சும பஞ்சாட்சரத்தை ஒலித்தால் ஆணவமலம் பரிபாகம் எய்தும். திரோதான சத்தி அருட் சத்தியாய் ஆன்மாவில்ப் பதியும். இதுவே சத்திநிபாதம். பின் சிவத்தோடு ஆன்மா ஒன்றிவிடும்.

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.