
அவரவர் வாழ்வினில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் அன்றைய அழகிய காலம் மறக்கமுடியாத தீர்த்ததிருவிழா. சூரிய உதயத்திற்கு முன்பே எழும்பி உறவுகளும் நட்புகளும் ஒன்றாக கூடி எமது பிள்ளையாரை தீரத்கடற்கரைக்கு கொண்டுசெல்லும் அழகே அழகு. அங்கு தேவி மாமி வீட்டில் உறவுகள் கூடி நின்று தீர்த்தகடற்கரைக்காக செய்யும் சாப்பாடுகளும் கட்டும்பூக்களும் அங்கு பிள்ளையாருக்கு மாவிலைகளும் தோரணங்களும் தொங்கும் பந்தலும் இன்று நினைத்தாலும் முடியாத அந்த உறவுகளின் ஒற்றுமை.