நினைவின் சங்கமத்தில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பனைமர காணியில் பந்து விளையாடும் ஆண்களும் சில நேரங்களில் பெண்களும், எங்களுக்கே என்று அமைந்த அந்த இடம்,
சிலபேர் மட்டும் ஞாபகத்தில் அருண், குமார், தாயுமானவன், வண்ணம், தம்பி, அலோசியஷ், சின்னமோகன், துசி, நேசன், யோகன்..... ஊர் உறங்கும் அந்த இரவில் கிளிபிடிக்கும் அந்த கூட்டமும் light வெளிச்சமும் டொக் டொக் என்று மரத்தில் குத்தும் சத்தமும் இன்றும் தூங்கும் போது சில சமயங்களில் நான் ஊரில் இருப்பதாக ஒரு கற்பனை. பனம்பழமும். பனங்குருத்தும், நொங்கும். ஏன் எங்கள் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட அனுபவங்களை கடவுள் தர மறுத்துவிட்டார். "விடை கொடு எங்கள் நாடே கடல் வாசம் தெளிக்கும் வீடே பனை மரக்காடே, பறவைகள் கூடே" என்ற பாடல் உயிரை உறைய வைக்கிறது, கூடுகள் மட்டும் தான் மிஞ்சிஉள்ளது.
அஞ்சலி இரவிசங்கர்
அஞ்சலி இரவிசங்கர்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.