மயிலை மண்ணில் ராசத்தி அக்காவின் ரியூசனை மறந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த உடைந்து முறிந்து போன கிடுகு வேலிக்குள்ளே ஒரு அன்னை திரேசா போலே இருந்து எங்களை உருவாக்கிய பெருமை ராசாத்தி அக்காவும் ராசு அக்காவுக்கும் தான் உண்டு. இன்று நாங்கள் எத்தனையோபேர் புலம் பெயர்நாட்டில் பட்டதாரிகளாகவும் பண்பட்டவர்களாகவும் வாழ வழிகாட்டயவர்கள். அங்கும் ராசாத்தி அக்கா என்றால் செல்லம் கொஞ்சலாம். ராசு அக்கா கொஞ்சம் கண்டிப்பு. ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் பேபி அக்காவை பார்க்க காத்திருப்போம். ஆனால் அவாவுக்கு எல்லோரும் பயம். ராசாத்தி அக்கா கிறிஸ்தவராக இருந்த போதும் ஒவ்வொரு வருடமும் எங்கள் சரஸ்வதி பூசையை திருவிழா போல மிகவும் சிறப்பாக கொண்டாடுவோம்.
இதேபோலதான் எங்கள் தேவி அக்கா தைக்கும் உடுப்பு. என்னுடைய அம்மாவும் நல்ல தையல்காரி தான் ஆனாலும் தேவி அக்கா தைக்கிற உடையில ஒரு style இருக்கும். எனக்கு ஊரில் அவாவிடம் உடை தைத்து போட சந்தர்ப்பம் அமையவில்லை ஆனாலும் நான் தையல் வேலை செய்யும் நேரத்தில் தேவி அக்காவை நினைப்பேன். என்னுடைய தையலுக்கு ஒரு Roll modal என்று கூட சொல்லலாம். எனது சிறு வயது மனதுக்குள் பூட்டிய ஆசைகளில் முதலாவது இது மட்டும் தான் . அவபோல ஒரு தையல்காரி ஆக வேண்டும் என்று. அவ எப்படி அழகோ அதேபோல் தையலிலும் ஒரு அழகு. இன்னும் என் மனதில் உள்ள ஆசை அவாவை நான் சந்தித்தால தையலைப்பற்றி கதைக்கவேணும். அதேநேரம் அவ மூலமாக ஒரு உடை தைக்கவேணும் என் மகளுக்கு. காரணம் எனது தாயார் மூலம் இது செய்யமுடியாது. பணத்தை குடுத்தால் எத்தனையோ நாகரீகமான உடை வாங்கலாம். நான் வித்தியாசமான ஆள் தான் பழமையும் என் மண்ணின் பெருமையும் தரக்கூடிய சந்தோஷம் புதுமையில் இல்லை.
அடுத்து எங்கள் குஞ்சரம் ஆச்சியின் மடம் . எத்தனையோ பேரின் இளைப்பாறும் இடம். மாதத்தில் ஒருதரம் பசி போக்கிய இடம். இன்று ஐயோ, சூடு, வெக்கை தாங்க முடியவில்லை என்று ஓடுகிற நாங்கள் தான் அந்த மடத்துக்கள் சமையல் செய்து சமையலுக்கு உதவி செய்தவரும் உண்டு. ஒவ்வொரு பவுர்ணமிக்கும் அந்த மடத்தின் பெருமை சொல்லமுடியாத இன்பம். இன்று ஒரு சிறிய வேலை செய்தாலே தம்பட்டம் அடிக்கும் காலம். ஆனால் குஞ்சரம் ஆச்சி வாழ்ந்த காலம் முழுவதும் இதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விளம்பரம் இல்லாமல் செய்தது என்ன ஒரு அற்புதம். மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயம் அங்கு சாப்பிட்ட மக்களை பார்த்து அறிந்த விடயம். ஒரே ஒரு குறை எப்போதுமே எனக்கு பிடிக்காத தேங்காய் திருவும் வேலை. இன்று நினைத்தாலும் நாக்கிலே ருசி உருகும் அந்த மரவள்ளிக்கிழங்கும் பூசணிக்காய் கறி. இறந்தும் என்னைப்போல் பல மனங்களில் கண்டிப்பாக வாழுகிறார்கள் நம் மண்ணின் சொந்தங்கள்.
அஞ்சலி இரவிசங்கர்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.