இன்று உங்கள் எல்லோர் முன்பும் ஒரு முக்கியமான விடயத்தை சிந்திக்கும் முகமாக நான் எழுதும் விடயம் முதுமை, முதியோர் இல்லம். நம் எல்லோருக்கும தெரிந்த விடயம் கைதடி முதியோர் இல்லம் ஆனால் அங்கு முதுமையை கழிப்பது நமது மயிலை மண்ணின் முதியோரும்தான்.
ஆனால் நாம் ஏன் அவர்களுக்கு உதவி செய்ய முன் வருவதில்லை. வெளி நாடுகளில் இருந்து இளம் மாணவர்கள் தங்கள் படிப்பின் வளர்ச்சிக்காக சில மாதங்களை இந்தியாவில் உள்ள முதியோர் இல்லத்தையும் குழந்தைகள் இல்லங்களையும் தெரிவுசெய்கிறார்கள். நமது சொந்த மண்ணை மறந்து விடுகிறார்கள். மயிலை மண்ணில் பிறந்த அனைவரையும் அன்பாக கேட்டுக்கொள்கிறேன் முதியோர் இல்லம் பால் குடித்த மிருகங்கள் போகும் இடமாக இல்லாமல் பாசத்தையும் காட்டுங்கள். இன்றைய கால கட்ட வாழ்க்கையில் முதியோர் இல்லம் தவறு என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நம்மால் முடிந்த சிறு உதவி செய்யுங்கள். நம்மில் எத்தனையோ பேருக்கு பெற்றோர் இல்லை ஆனாலும் நமது ஊரில் வாழ்ந்தவர்கள் நமது உறவுகள். உங்களால் முடிந்தால் உங்கள் sommer vaccationல. ஊர் பக்கம் போகும் மக்கள் ஒரு தடவை கைதடி முதியோர் இல்லம் போனால் உங்களுக்கு தெரியும் . அங்கு இருக்கும் நம் உறவுகள் பற்றி. காலத்தின் கட்டாயம் முதுமை எல்லோருக்கும் உள்ள பருவம். இன்று அவர்கள் நாளை நாம்.
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.