என் பெயர் அஞ்சலி. எனக்கு கருவறையை கடனாக தந்தவளோ வீரமாணிக்கதேவனின் பேத்தி. நான் கருவறையை விட்டு வந்ததோ பெரியமாணிக்கதேவனின் மண்ணில் இடையில் என் உறவுகளோ நரசிம்மனின் மண்ணில் ஆனாலும் மூன்று உறவுகளும் முட்டி மோதாத பெருமை பெற்ற என் உறவுகளுக்கு முதல் வணக்கம் . மாதாகோயில் மணியோசையில நான் என் மலரும் நினைவுகளை ஆரம்பிக்கிறேன் காரணம் என் ஆரம்பக் கல்விக்கூடமும் mother roseம் அங்கே தான் ஆரம்பம் .
றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை என்று நாங்களும் வேதப்பள்ளிகூடம் என்று வயது முதிர்ந்தோரும் அழைக்கும் RC school தான் எனது ஆரம்பப் பாடசாலை, அங்கு ஞாபகமாக இருப்பது இன்றும் திரேசம்மா ரீச்சர் ம்ற்றும் அவர் எங்களுக்கு பழக்கி ஆடிய "சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும்" பாட்டும், என் ஆரம்பகால தோழிகள் பூங்கோதை, மல்லிகா (இன்று அலோசியசின் மனைவி), றெஜினா. ஜெனிற்றா இவர்களுடன் நானும் சேர்ந்து நடித்த நல்லதங்காள் நாடகம். இதில் மறக்கமுடியாத அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே. இதை தாண்டி மதர் எங்களை Church க்கு கூட்டிப் போவது, பள்ளிக்கூட சிரமதானம். அந்த மறக்கவே முடியாத குறோட்டன் இலை காரணம் நாங்கள் சித்திரம் கீறி கலர் அடிக்க பாவிக்கும் கிண்ணம் போல இலை.
எதையுமே மறக்க முடியாது. மூன்று வருடங்கள் தான் எனது காலங்கள் அந்த school ல் ஆனாலும் அங்கு தான் என் தையல் கலைக்கு விதை போடப்பட்டது . இன்று நான் சிறப்பான jey elegant design எனும் புகழ் பெற்ற designer ஆக இருப்பதற்கு காரணம் . ஒரு நிமிடம் பாரத்தாலே அதை உருவமைக்க இன்று என்னால் முடியும். அத்துடன் மதர் சொன்ன விடயம் இன்றும் என் கண்ணுக்குள்ளே அன்பு மட்டும் தான் உண்மை. அன்புக்கு ஜாதி மதம் இல்லை. இதுதான் இன்றும் எனது மந்திரம். கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே பாடலை கேட்கும் போது அந்த மதர் தான் என் முன்னே. ஜாதி மத வெறி இல்லாத ஒரு பெண்ணாக என்னை உருவாக்கிய பங்கு அவருக்கு எனது கோடான கோடி நன்றிகள்.
தொடரும்......