இது எங்களுக்காக பிள்ளையார் தந்த ஒரு விலை மதிக்கமுடியாத திறந்தவெளி திரையரங்கு. அந்த உண்டியலுக்கு மேலே உள்ள இடம் மாதாகோயிலில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் சிவக்கொழுந்து ஆச்சி முதல் செல்வம் மாமியையும், நாவலடியில் இருந்து....
அந்த சைக்கிளில் இரண்டு குடங்களை கட்டிவரும் குட்டியின் அப்பா இராசகிளி மாமாவையும் அழகாக காட்டும் அதிசய திரை. அழகான அந்த பனைமரம், அருகே எங்கள் பிள்ளையார், அதற்காக கட்டப்பட்ட ரங்கப்பாவின் திண்ணை, வாழ்ந்தது நாங்கள் ஒருதரம், எங்கள் பெற்றோருக்கு பிள்ளைகளாக அதை தித்திக்க தித்திக்க வாழ்ந்தது பெருமை. மனம் நிறைய உறவுகள், அகம் நிறைந்த நண்பர்கள். சந்தேகம் எந்த கடையிலும் விற்று எங்கள் பெற்றோர் வாங்காத வரம். அந்த உண்டியலுக்கும் கோயில் உள் வாசலுக்கும் இடையில் உள்ள அந்த சிறிய இடம், எவ்வளவோ இடம் இருந்தாலும் அந்த இடத்திற்க்கு அடிபட்டு இடம் பிடிப்பதில் உள்ள சந்தோசம். .
காரணம் பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் அந்த ஓடையில் ஒழித்து நிற்பது ஒரு வித தனிசுகம். அடுத்த பக்கம் எங்கள் ஆண்சிங்கங்கள்.கோயில் திருப்பணிக்காக மாலை போட்டவர்கள். 15 நாட்கள் கோயிலே வீடு. மாலை கட்டுவதில் இருந்து தோரணங்கள் கட்டும்வரை பகலிலும் கோயில் கழுவுவது, சாமி தூக்குவது, இடையே அந்த கடைகண் பார்வை, காதலி மீது. இன்று யாருமே அனுபவிக்க முடியாத சினிமாவில் மட்டும் பார்க்கும் வாழ்க்கை. வாழ்ந்திருக்கிறோம் சந்தோசத்துடன். உண்டியலுக்குள்ளே போட்ட பணம். விழுந்துவிட்டதா என்று பார்ப்பதில் எத்தனை சண்டைகள்,
கோயிலை மையமாக வைத்து வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்த நம் தலைமுறைக்கு ஒரு வணக்கம் வாழமுடியாத எங்கள் குழந்தைகளுக்கு சொல்லிதரவேண்டும்.
- அஞ்சலி வசீகரன்