அனல்பறக்கும் அக்கினி வெயிலும் அமர்களப்பட்ட தீர்த்தகடற்கரையும் ........................
அவரவர் வாழ்வினில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் அன்றைய அழகிய காலம் மறக்கமுடியாத தீர்த்ததிருவிழா. சூரிய உதயத்திற்கு முன்பே எழும்பி உறவுகளும் நட்புகளும் ஒன்றாக கூடி எமது பிள்ளையாரை தீரத்கடற்கரைக்கு கொண்டுசெல்லும் அழகே அழகு. அங்கு தேவி மாமி வீட்டில் உறவுகள் கூடி நின்று தீர்த்தகடற்கரைக்காக செய்யும் சாப்பாடுகளும் கட்டும்பூக்களும் அங்கு பிள்ளையாருக்கு மாவிலைகளும் தோரணங்களும் தொங்கும் பந்தலும் இன்று நினைத்தாலும் முடியாத அந்த உறவுகளின் ஒற்றுமை.

சாமி தீர்த்தம் ஆடியதும் அடித்து பிடித்து கடலுக்குள் குதிப்பவர்களும், சிலர் கரையிலே நின்று தண்ணியை தொட்டு தெளிப்பதும் என்ன ஒரு காட்சி. ஒரு தடவை என்னால் இன்றும் மறக்கமுடியாத காட்சி சாமி தீர்த்தம் ஆடமுன்பு என் அத்தான் சுரேஸ் சேகரம் மாமாவின் மகன் கடலுக்கள் இறங்கி அவன் மூழ்க போக பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அவன் காப்பாற்றபட்டு வெளியே வந்ததும் தேவிமாமியின் கிணற்றுக்கு பக்கத்தில் வைத்து மாமா அவனைப் போட்டு அடுத்த அடியில் சுற்றியிருந்த எங்கள் கண்களை அறியாது கண்ணீர் ஓட மறக்கவே முடியாத தருணம்.
தீர்த்ம் முடிந்தவுடன் அந்த உச்ச அக்கினி வெய்யிலில் சாமியை தூக்கியபடி ஓட்டமும் நடையுமாக முருகன் கோயிலுக்கு செல்லும் கூட்டம். தெருவெல்லாம் தண்ணீரை இறத்து சூட்டைத் தணிக்க உதவும் உறவுகள், என்ன ஒரு ஆனந்தமான நாட்கள் மறக்க முடியாத பொற்காலம்.
காந்தி, செல்லசோதி, வெள்ளையப்பு, இன்னும் பலர் பெயர்கள் ஞாபகத்தில் இல்லை இன்று கண்ணீர் முட்டி நெஞ்சை சுடுகிறது. இடையிலே சிலமணிநேரம் எல்லா வீடுகளும் திருவிழாகோலம், பலநாட்களாக ஆயத்தபடுத்தி வைத்த உடைகள், முதல்நாள் கட்டிவைத்த மாலைகள், மாறுகரைவேட்டி சால்வைகள், எல்லாத்த்தையும் சரிப்பண்ணி கோயிலுக்கு சென்று எங்கள் குருக்களை ஊர்வலமாக கூட்டிச்சென்று பிள்ளையாரை அங்கிருந்து தூக்கி மீண்டும் கோயிலுக்கு வரும்வரை என்ன ஒரு சந்தோசம்.
ஊரே சந்தோசத்தில் அன்று iphone ம், Samsung ம் இல்லை, ஆனால் வெள்ளைவேட்டி கட்டி சாமி தூக்கும் இளைஞர்களும், பட்டுப்பாவடையும் தாவணியும் கால் கொலுசும் ஓசைபோட தேவாரம் பாடும் பெண்களும், பக்தி பெருக்கோடு அப்பாக்ளும், இளைஞர்களுக்கு மாற்றுக்கை தருவதற்க்கு ஆயத்தமாகவும், தலைநிறைய பூவும் பொட்டும் வைத்து இயற்கைதந்த அழகை சுமந்து வரும் அழகான அம்மாக்களும் உண்மையான பக்தியுடன் செல்லும் காட்சி காண ஆயிரம் கண்வேண்டும்.
ஊர்முழுதும் மின் வெளிச்சங்கள் சூழ தோரணமும் மேளச்சத்தமும் நாதஸ்வரமும், இடையிடையே சுண்டலும் பழங்களும் அவலும் இன்னும் விதம் விதமான் சாப்பாட்டுடன் ஊர்கோலம். பணிவு துறை என்ற பேதம் இல்லை. பணம் உள்ளவன் தான் வரலாம் என்ற நியதி இல்லை, இறைச்சி இல்லாமல் சாப்பிடமாட்டோம் என்ற உணர்வும் இல்லை, இதில் நாங்கள் என்ன ஆச்சரியம் என்றால் கடல்தொழிலை மையமாக கைத்து வாழ்ந்த நாங்கள் ஆனால் எல்லாவீட்டிலும் 15 நாட்களும் விரதம், அன்று மேக்கப் போடவில்லை, தினமும் ஒரு உடை என்று புதிது புதிதாக உடுத்தவில்லை. நகைக்காக சண்டை போடவில்லை, ஆனாலும் காதலும், கனிவும், கடைக்கண் பார்வையும், கடவுளின் ஆசியும் கிடைத்தது.
கடையில் பொருள் வாங்க யாரும் போகவில்லை, தெரிந்தவர்களோடை சேர்ந்து போவதற்காகவும் போகவில்லை. எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றோம். நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்தோம் அது ஒரு பொற்காலம்.
-குறிப்பு யாருடைய பெயரும் எழுதியது அன்பினால் எழுதப்படாத பெயர்களில் பலபேர் கண்ணுக்குள் நிற்கிறார்கள் பெயர்கள் மறந்துவிட்டது. முடிந்தால் எழுதுங்கள். தொடரபும் கொள்ளலாம் . நன்றி.
- அஞ்சலி வசீகரன்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.