நினைவுகளின் சங்கமத்தில் அடுத்து வருவது எங்கள் தீர்த்தத் திருவிழா. ஊரெல்லாம் கூடி ஊர்வலமாக போய் கடற்கரையில் கூடி என்னவொரு சந்தோஷம்.
தேவி மாமியின் வீடெல்லாம் பழங்களும் பூக்களும் உறவினர் கூட்டமும் அந்த பஞ்சாமிர்தத்தின் வாசனையும், மறக்கவே முடியாது. சுவாமி கடலில் இறங்கும் வரை காத்திருக்கும் கூட்டம். ஒருவருடம் மறக்கவே முடியாது . சுரேஷ் கடலில் சுவாமிக்கு முதலே இறங்கி சேகரம் மாமாவிடம் வாங்கிய அடியில் நாங்க எல்லோருமே அழுது, அதுதான் நாங்க ஊரில் சந்தோஷமாக உறவுகளுடன் இருந்த இறுதி திருவிழா. இன்றும் நான் சரேஷுடன் கதைக்கும் போது அதை ஞாபகப்படுத்திப் பார்ப்போம் .
தீர்த்தம் முடிந்தவுடன் உச்ச வெயிலில் பிள்ளையாரை தூக்கி கொண்டு முருகன் கோயிலுக்கு ஓடுபவர்களும் அதற்க்குப் பின்னால் ஓடும் மக்களும் றோட்டுக்கு தண்ணி ஊற்றும் உறவுகளும் என்ன ஒரு அழகான தருணங்கள். அன்றைய தினம் அழகான மாலைப் பொழுது. உறவினர் நண்பர்கள் எல்லோருமே ஊர்வலமாக பிள்ளையாருக்குப் பின்னால் அங்கங்கே பலகாரங்களும், கூட்டுப்பிராத்தனைக் கூட்டமும், நண்பர்களின் அரட்டை, காதலர்களின் சந்திப்பு, பிள்ளையாரைத் தூக்கி வரும் ஆண்கள் மறக்கும் போது நினைவுகளாக தொடரும் சிறு கதை.
அஞ்சலி இரவிசங்கர்