அடுத்த என் மலரும் நினைவு, மாதா கோயில் பெருநாள்.
ஊரெல்லாம் கடை, நூறு தடவை வந்து வந்து பார்ப்போம் கடைகள் போட்டுவிட்டார்களா என்று. ஒவ்வொரு வருடமும் கடைகளின் எண்ணக்கை கூடி இறுதியாக அரசடி மட்டும் கடை பார்த்தோம்.
ஊரெல்லாம் கடை, நூறு தடவை வந்து வந்து பார்ப்போம் கடைகள் போட்டுவிட்டார்களா என்று. ஒவ்வொரு வருடமும் கடைகளின் எண்ணக்கை கூடி இறுதியாக அரசடி மட்டும் கடை பார்த்தோம்.
எத்தனை வகையான இனிப்புகள், தேன்குழல், அல்வா உட்பட மறக்கவேமுடியாது. அழகு சாதனங்கள், அத்தியாவசிய பொருட்களுக்காக வருடம் முழுவதும் காத்திருப்பது ஒரு சந்தோஷம். மத வேறுபாடு இல்லாமல் கொண்டாடும் பெருநாள். அடுத்தநாள் கூடு சுத்தும் போது தரும் சாப்பாடு எவ்வளவு சந்தோசங்கள். ஊரே அங்கு கூடியிருக்கும். ஆனால் எங்கள் கச்சான் கடை மட்டும் அசையாது அந்த இடத்தை விட்டு. எனது தங்கையை தூங்கவைப்பதற்காக அவளை தோளில் போட்டு 4 தடவை கச்சான் கடை வரை ஐயைய்யா தள்ளாத வயதிலும் நடந்துவருவார். காலம் ஓடி விட்டது .காலனும் கொண்டு போய்விட்டார் அவர்கள் இருவரையும். என் கண்ணை மட்டும் விட்டு அந்த காட்சி மறையவில்லை.