இப்படி ஒரு அனுபவம் எனக்கும் என் சகோதரர்களுக்கும் பல தடவை ஏற்பட்டுள்ளது . ஆனால் எங்களை மழை வெள்ளத்தில் இருந்து பல தடவைகள் இப்படி தூக்கி பாதுகாத்த எங்கள் வீட்டுக்கு பின்னால் வாழ்ந்த ராசன். அவரின் தாயார் இரண்டு கால்களும் கைகளும் முடியாத ஒரு ஊனமுற்றவர் என்பது எங்கள் ஊரில் பிறந்த எல்லோருக்கும் தெரியும்.
ஆனாலும் எங்களுக்கு பல வழிகளில் உதவியாக இருந்தவர் .எத்தனையோ உறவினர் இருந்தும் ஆரம்பகாலத்தில் இருந்தே எங்கள் காவல் தெய்வமாகவும். பொழுதுபோக்க கதை சொல்லியும். நோங்குவெட்டவும் . பனம்பாத்தி போடவும் பூரான் வெட்டவும் அவரும் அவர்மகனும் அவரது அக்காவின் பிள்ளைகளான தேன்கிளியும் வசந்தாவும் எங்கள் வாழ்வில் எங்களோடு சேர்ந்தே வந்தவர்கள் . அவர்கள் எங்குஇருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இந்த புதுவருடத்தில் அவர்களில் யாராவது ஒருவரின் தொடர்பாவது கிடைக்கவேண்டும் என்பது எனது பிரார்த்தனை. மனசு எல்லாம் அன்பான மனிதர்கள் . யாதி மத்த்திற்கு அப்பாற்பட்ட எங்கள் உறவு.
அஞ்சலி இரவிசங்கர்
அஞ்சலி இரவிசங்கர்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.