
வலி.வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.
வலி.வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திடீர் கண1/3/2025 ![]()
வலி.வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.
0 Comments
23/01/2025 வியாழக்கிழமை வெளியாகிய 2024ம் ஆண்டிற்கான புலமைப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எமது திருப்பூர் ஒன்றியத்தைச சேர்ந்த மூன்று மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
(இதுவரை கிடைக்கப்பெற்றவை) சொந்த வாழ்விடங்களை மீட்காமல் ஓயமாட்டோம்; உணவுத் தவிர்ப்பில் ஈடுபடும் வலி வடக்கு மக்கள் சபதம்16/11/2013 ![]() "எங்கள் சொந்த நிலங்களை மீட்கும் வரையில் போராட்டம் ஓயாது. எத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும். வலி. வடக்கு மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் இன்றைய இறுதி நாளில் அனைவரும் அணி திரள்வோம்'' இவ்வாறு அறைகூவல் விடுத்தார் வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம். ![]() தம்மை மீளக்குடியமர்த்தக் கோரி வலி.வடக்கு மக்கள் ஆரம்பித்துள்ள தொடர் உணவு விடுப்பு போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் ஆரம்பமாகியுள்ளது. 1990ஆம் ஆண்டில் இருந்து உயர்பாதுகாப்பு வலையம் என இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை விடுவிக்க கோரி மக்கள் மாவட்டபுரம் கந்தன் ஆலய முன்றலில் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இன்றைய மூன்றாம் நாள் போராட்டத்திலும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தாண்டி நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்றைய நாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் , வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன் , சித்தார்த்தன் , ஆகியோரும் , பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர். நன்றி: உதயன். கொம் போராட்டத்தை குழப்ப இனந்தெரியாதவர்கள் மக்கள் மீது தொடர் தாக்குதல்!![]() போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் மீது இனந்தெரியாதவர்கள் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் வலி;வடக்கு மக்கள் தமது நிலங்களை தங்களிடம் வழங்குமாறு கோரி மாவட்டபுரம் கந்தன் ஆலயத்திற்கு முன்னால் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலும் நண்பர்கள், வாடகை வீடுகளிலும் தங்கி இருக்கும் மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வரும் வாகனங்களை நிறுத்தும் நோக்குடன் இனந்தெரியாதவர்களினால் பிரத்தியோகமாக ஆணிகளால் செய்யப்பட்ட இரும்புக் கட்டைகளை வீதிகளில் வீசுவதுடன் மக்கள் மீதும் வீசியும் தாக்குதல் நடாத்தி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நேற்று இரவு மக்கள் வருகை தரஇருந்த பஸ்கள் மீது கல்லெறி தாக்குதல் நடாத்தியதுடன் சாரதிகள் மற்றும் மக்களும் இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்தும் போராட்டத்திற்கு கலந்து கொள்ளும் மக்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்க கூடாது என இன்றைய தினம் வடமராட்சி தனியார் சிற்றூர்திகள் சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மக்கள் தமது பணத்தை கொடுத்து ஹயெஎஸ் என்பனவற்றிலேயே வந்துகொண்டு இருக்கின்றனர். இதேவேளை நேற்யை தினமும் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி: உதயன். கொம் ![]() சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியமர்த்த கோரி வலி.வடக்கு மக்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று காலை 8மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. தமது வீடுகள் அழிக்கப்படுவதை நிறுத்துமாறும் தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறும் வலியுறுத்தி இந்த மக்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர் . யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்தப் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது . இந்த போராட்டத்தில், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், மாவை சேனாதிராசா, சிறிதரன், வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களான குருகுலராசா, சத்தியசீலன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், சித்தார்த்தன், சுகிர்தன் ஆகியோரும், பிரதேச சபைகளின் தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். எதிர்வரும் 16 ம் திகதி வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நன்றி: தமிழ்வின்.கொம் வலி.வடக்கு மக்களின் போராட்டத்திற்கு முதலமைச்சர் ஆதரவு!![]() வடக்கு மாகாண முதலமைச்சர் சி;வி விக்கினேஸ்வரன் வலி.வடக்கு மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு மக்களுடனும் கலந்துரையாடினார். உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று வடக்கு முதலமைச்சர் கலந்து கொண்டதுடன் மக்களுடனும் கலந்துரையாடி எதிர்காலத்தில் இராணுவ வெளியேற்றம், உயர்பாதுகாப்பு வலையம் இல்லாது செய்தல், மீள்குடியேற்றம் என்பவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். போராட்டத்திற்கு ஆதரவினையும் தெரிவித்துக் கொண்டார். இதேவேளை, சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு தற்போதைய வடக்கு நிலமைகள் குறித்து தெளிவு படுத்தியதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் குறித்தும் தெளிவு படுத்தினார்! நன்றி: உதயன்.கொம் ![]() வலிகாமம் வடக்கில் மக்களை மீளக்குடியேற அனுமதிக்கக் கோரி இடம்பெயர்ந்த மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஐந்து நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகியது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவான், எஸ். சிறிதரன், வட மாகாண சபையின் தவிசாளர் சீ.வீ.க. சிவஞானம், கல்வி அமைச்சர் பி. குருகுலராசா மற்றும் உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா. கஜதீபன், திருமதி அனந்தி சசிதரன், க. பரஞ்சோதி மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் இடம்பெயர்ந்த மக்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இதேவேளை காங்கேசன்துறை வீதி தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து மாவிட்டபுரம் வரை பல இடங்களிலும் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். இதேபோன்று மாவிட்டபுரம் கீரிமலை வீதியிலும் பொலிஸார் வழமைக்கு மாறாக கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆலய சுற்றாடலிலும் அதிக எண்ணிக்கையான பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.
![]() வலி.வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடழிப்புநடவடிக்கைகளை உடன் நிறுத்தக் கோரியும், அந்தப் பகுதிகளை மக்கள் குடியமர்வுக்கு விடுவிக்கக் கோரியும் எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்க வலி.வடக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். இந்தப் போராட்டம் வலி. வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம் தலைமையில் நடைபெறும் என்று வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார். ![]() வலி வடக்கு கிராமசேவையாளர் பிரிவுகளில் உள்ள மயிலிட்டித்துறை வடக்கு (ஜே/251) மற்றும் மயிலிட்டித்துறை தெற்கு (ஜே/248) ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளின் கீழ் மயிலிட்டித்துறை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாகம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டு 31/10/2013 இன்று தெல்லிப்பளை உதவி அரசாங்க அதிபர் பணிமணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி: தகவல், புகைப்படங்கள் திரு. அ. குணபாலசிங்கம் ![]() மயிலிட்டி கடற்தொழிலாளர் கிராமிய அமைப்பின் கடலுணவு ஏல விற்பனை நிலையத்தினை 10/08/2013 அன்று கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் Dr. ராஜித சேனாரட்ண அவர்களும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் K.N. டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வைபவ ரீதியாக திறந்துவைத்தார்கள். அந் நிகழ்வின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு! நன்றி: புகைப்படங்கள் திரு. அ. குணபாலசிங்கம் |
மயிலிட்டி செய்திகள்நேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் பதிவுகள்
March 2025
அனைத்துப் பதிவுகள் |