சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியமர்த்த கோரி வலி.வடக்கு மக்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று காலை 8மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
தமது வீடுகள் அழிக்கப்படுவதை நிறுத்துமாறும் தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறும் வலியுறுத்தி இந்த மக்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர் .
யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்தப் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது .
இந்த போராட்டத்தில், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், மாவை சேனாதிராசா, சிறிதரன், வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களான குருகுலராசா, சத்தியசீலன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், சித்தார்த்தன், சுகிர்தன் ஆகியோரும், பிரதேச சபைகளின் தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 16 ம் திகதி வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நன்றி: தமிழ்வின்.கொம்

வலி.வடக்கு மக்களின் போராட்டத்திற்கு முதலமைச்சர் ஆதரவு!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி;வி விக்கினேஸ்வரன் வலி.வடக்கு மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு மக்களுடனும் கலந்துரையாடினார்.
உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று வடக்கு முதலமைச்சர் கலந்து கொண்டதுடன் மக்களுடனும் கலந்துரையாடி எதிர்காலத்தில் இராணுவ வெளியேற்றம், உயர்பாதுகாப்பு வலையம் இல்லாது செய்தல், மீள்குடியேற்றம் என்பவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
போராட்டத்திற்கு ஆதரவினையும் தெரிவித்துக் கொண்டார். இதேவேளை, சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு தற்போதைய வடக்கு நிலமைகள் குறித்து தெளிவு படுத்தியதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் குறித்தும் தெளிவு படுத்தினார்!
நன்றி: உதயன்.கொம்