"எங்கள் சொந்த நிலங்களை மீட்கும் வரையில் போராட்டம் ஓயாது. எத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும். வலி. வடக்கு மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் இன்றைய இறுதி நாளில் அனைவரும் அணி திரள்வோம்''
இவ்வாறு அறைகூவல் விடுத்தார் வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம்.

வலி. வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 24 கிராம சேவையாளர் பிரிவுகளையும் விடுவிக்குமாறு கோரி வலி. வடக்கு மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ச்சியாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் முன்பாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் எழுச்சியுடன் பங்கெடுத்து வருகின்றனர். இந்தப் போராட் டத்தின் இறுதிநாள் இன்றாகும்.
இந்த நிலையில் இன்றைய போராட்டத்துக்கு மக்களை அணிதிரளுமாறு வலி. வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அ. குணபாலசிங்கம் அழைப்பு விடுத்துளளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: 23 வருடங்களாக சொந்த மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றோம். எங்கள் நிலங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டுள்ளன.
அபிவிருத்தியை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அபிவிருத்தி என்ற பெயரில் எங்கள் நிலங்கள் இராணுவத் தேவைக்காகவே கையப்படுத்தப்பட்டுள்ளன. அதனையே எதிர்க்கிறோம். போர் நடைபெற்ற காலத்தில் எங்கள் நிலங்களுக்கு செல்லவிடுமாறு உங்களை நாம் கேட்கவில்லை. போர் முடிந்துவிட்டது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கின்றீர்கள் அப்படியானால் எங்கள் நிலங்களை யாருக்காகப் பிடித்து வைத்திருக்கின்றீர்கள். இலங்கை அரசு உண்மையிலேயே நல்லிணக்கத்தை விரும்புகின்ற அரசாக இருந்தால், எங்களை சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும். எங்களுக்கு எங்களின் வளம் கொழிக்கின்ற நிலமும் கடலும் தான் வேண்டும். இதை நாம் முழுதாகப் பெற்றுக் கொள்ளும் வரை எங்கள் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்றார்.
இன்றயை இறுதி நாள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர் தலைவர் இரா. சம்பந்தனும் இதில் பங்கெடுக்கவுள்ளார்.
வடமராட்சி மீனவர் சங்கங்கள், வலி வடக்கு மக்களின் இன்றைய போராட்டத்துக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன.
நன்றி: உதயன்.கொம்

பிரி. பிரதமர் வருகையை எதிர்த்து சிங்களவர்கள் சுன்னாகத்தில் போராட்டம்!- மாவிட்டபுரம் போராட்ட மக்களை சந்திக்காமல் பிரதமர் கொழும்பு திரும்பினார்!
சுன்னாகம் பகுதியில் சிங்கள மக்களால் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு வருகை தந்த பிரிட்டிஷ் பிரதமர் அந்த நிகழ்வுடன் மீளவும் கொழும்பு திரும்பியுள்ளார்.
வலிகாமம் வடக்கில் தமிழர்களுக்கு வாழும் உரிமை மறுக்கப்பட்டிருப்பதை பிரிட்டிஷ் பிரதமருக்கு வெளிப்படுத்துவதற்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன், வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
படையினரின் ஏற்பாட்டில் சிங்கள மக்களால் யாழ்.சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டமே பிரிட்டிஷ் பிரதமர் வராமைக்கான காரணம் என மக்கள் விசனமடைந்துள்ளனர்.
யாழ்.வருகை தந்திருந்த பிரிட்டிஷ் பிரதமர் வலிகாமம் வடக்கு மக்களால் நடத்தப்பட்ட போராட்டத்திலும் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாலை 6.00மணி வரையில் மக்கள் காத்திருந்தனர்.
அதற்குள் சுன்னாகம் பகுதியில் சிங்கள மக்களால் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.
இதனால் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு வருகை தந்த பிரிட்டிஷ் பிரதமர் அந்த நிகழ்வுடன் மீளவும் கொழும்பு திரும்பியுள்ளார்.
மேலும் சபாபதிப்பிள்ளை முகாம் தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்களை நேற்று படையினர் சந்தித்து மதுபான விருந்து கொடுத்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனினும் சகலவற்றையும் தாண்டி மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மாவிட்டபுரம்- கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் அவர் கலந்து கொள்ளாமையினால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்ததுடன், சில மக்கள் அழுதும் உள்ளனர்.
முன்னதாக இன்று காலை யாழ்.மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் மாவிட்டபுரம் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மக்களுக்கு படைப்புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன், 3 வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனாலும் எதிர்ப்புக்களை மீறி சுமார் 1500ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
நன்றி: தமிழ்வின்.கொம்