"வறுமையின் சாடல்"
அன்பே உருவான இறைவனே
அகிலமும் ஆளும் இறைவனே
கல்லாலான இறைவனே
கருணையே உன்னிடம் இல்லை(யா)
உருவமே இல்லா இறைவனே
உருக்கமே உன்னிடம் இல்லை(யா)
மானிடர்யிடத்தில் ஏன் உன் பித்தலாட்டம்
பொக்கிஷம் ஏன் கொடுத்தாய் பலரிடம்
வறுமையை ஏன் கொடுத்தாய் எங்களிடம்
அன்பே உருவான இறைவனே
அகிலமும் ஆளும் இறைவனே
கல்லாலான இறைவனே
கருணையே உன்னிடம் இல்லை(யா)
உருவமே இல்லா இறைவனே
உருக்கமே உன்னிடம் இல்லை(யா)
மானிடர்யிடத்தில் ஏன் உன் பித்தலாட்டம்
பொக்கிஷம் ஏன் கொடுத்தாய் பலரிடம்
வறுமையை ஏன் கொடுத்தாய் எங்களிடம்
உன்பசி போக்க பலருள்ளார் பாரில்
எம்பசி போக்க எவர் உள்ளார் ?
உனக்கோ இராயகோபுரம் அமைப்பார் பலர்
நாம் ஒதுங்க எமக்கேது குடில்
உன் புகலிடத்தில் தஞ்சம் ஏது இந்த ஏழைக்கு
ஏழையிடம் தானம் செய்பவனுக்கே முதலிடம்
நீயோ கொடுப்பது முதலிடம் செல்வந்தனுக்கு
பசியின் கொடுமை நீயறிவாயா ?
பட்டினிசாவினை நீயறிவாயா ?
பாலகர் படும்பாட்டினை நீ பார்ப்பாயா?
இப்பாரின் வறுமையினை
காமப்பிரியனிடம் காட்டு
அரக்க ஆட்சிசெய்பவனிடம் காட்டு
தர்மத்தினை கொலைசெய்பவனிடம் காட்டு
வயிற்று பசியில் வாடுபவனிடம் வேண்டாமே
நன்றி
மயிலை ச .சாந்தன்
எம்பசி போக்க எவர் உள்ளார் ?
உனக்கோ இராயகோபுரம் அமைப்பார் பலர்
நாம் ஒதுங்க எமக்கேது குடில்
உன் புகலிடத்தில் தஞ்சம் ஏது இந்த ஏழைக்கு
ஏழையிடம் தானம் செய்பவனுக்கே முதலிடம்
நீயோ கொடுப்பது முதலிடம் செல்வந்தனுக்கு
பசியின் கொடுமை நீயறிவாயா ?
பட்டினிசாவினை நீயறிவாயா ?
பாலகர் படும்பாட்டினை நீ பார்ப்பாயா?
இப்பாரின் வறுமையினை
காமப்பிரியனிடம் காட்டு
அரக்க ஆட்சிசெய்பவனிடம் காட்டு
தர்மத்தினை கொலைசெய்பவனிடம் காட்டு
வயிற்று பசியில் வாடுபவனிடம் வேண்டாமே
நன்றி
மயிலை ச .சாந்தன்