"அகதிகளின் உள்ள குமுறல்"
சொந்தமாயிருந்த வீடு இழந்து
சொத்தேயென்று இருந்த கல்வியிழந்து
சொர்க்கமேயென்று இருந்த மண் இழந்து
சொந்தமில்லா அன்னிய தேசத்தில்
சொல்லொணா துயருடன் அகதியெனும் பட்டத்துடன்
வாரிவாரி அணைத்த சொந்தங்களை பிரிந்து
வாசமில்லா தேசம்வர பணத்தினை அள்ளியள்ளி கொடுத்து
வானவில் பார்த்து இரசித்த வானத்தில்
வானப்பறவை மூலம் பறந்து வானகத்து தேசம் வந்தோம்

அடுத்தவன் குடிகெடுப்போர் மத்தியில்
அகதிப்பட்டம் பெறுவதற்கு அவதிப்பட்டோம்
தொலைபேசி இணைப்புக்களில் சொந்தங்களின் உயிர்துடிப்புகேட்க
தூக்கங்கள் பல தொலைத்தோம்
வட்டிக்கடன் கட்டவும்
வந்தேறு இடத்தில் வயிற்றுப்பசி போக்கவும்
வயதுக்கு வந்த சகோதரியை வல்லூறுக்களிடம்மிருந்து காப்பாற்றவும்
வயதுக்கு வந்த பெற்றோர்களை பூரிப்போடு காப்பாற்றவும்
வாழ்க்கை துணையாக வந்தவளை வசதியாக வைத்திருக்கவும்
வந்தேறுதேசத்தின் வீதிகளில் தெருநாய்க்களாக வேலைதேடினோம்
இரவு பகல் அழகினை இரசிக்கவும் முடியவில்லை
இமயங்கள் தொட்ட எம் துன்பங்களை சொல்லவும் முடியவில்லை
சொர்க்கமான அம்மாவின்மடிபோல் இங்கு சொகுசான படுக்கையும்மில்லை
அன்னியதேசத்தில் அன்னிய நாட்டு பணம்பல கண்டோம்
ஏனோ .......அன்னியதேசத்தில் சொந்தம்பல இழந்தோம்
பனிமழையிலும் பணிபல கண்டோம்
பனியில் நகக்கண்ய இடுக்குகளில் பிய்த்தெறியும் இரத்தங்களையும்
தூசுபோல துடைத்தெறிந்தோம்
நெஞ்சுசலியினையும் எம் நெஞ்சங்களுக்காக சுமந்தோம்
வெளிதேசத்து வரிமுறைகள் எம்மை வாட்டியெடுக்கவும்
விடுமுறைநாட்களையும் நாம் விட்டுவைக்கவில்லை
வித்தைகள் காட்டுபவர்கள் நாம் அல்ல
விசித்திரமான தேசத்தில் விதிவிலக்காக வாழ்கின்றோம்
வெளிதேசத்தில் வாழும் ஆத்மாக்களின் வலிகளை எடுத்துரைக்க
என் எண்ணோட்டங்கள் கைவிரல்களுடன் போட்டியிடுகின்றன
ஏனோ ..................
கைவிரல்களிடையேயுள்ள பேனா
தன் மைகளை வெள்ளைத்தாள்களிலும் தடவ மறுக்கின்றன
நம் கண்களில் நழுவும் கண்ணீரால் முகம் கழுவும் எம் உள்ளக்குமுறல்களை கண்டு .
நன்றி
மயிலை ச .சாந்தன்